ரஹ்மான் சொன்னதை கேட்கல: இப்போ ஃபீல் பண்றேன்; விக்ரம் பட தோல்வி குறித்து இயக்குனர் வருத்தம்!
ஏ.ஆர்.ரஹ்மான் திரைக்கதையில் சொன்ன மாற்றத்தை செய்திருந்தால், இந்த படம் வெற்றியாகி இருக்கும். படத்தின் தோல்வியை அப்போதே அவர் கணித்துவிட்டார் என்று பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குடும்ப படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான ஒரு படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், இந்த படத்தில் சில இடையூறுகள் இருக்கிறது. இதை சரி செய்தால் படம் வெற்றியாகும் இல்லை என்றால் தோல்விதான் என்று கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் விக்ரமன், ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதை ஏற்காமல், படத்த வெளியிட்டுள்ளார். படம் கொடுத்த முடிவு என்ன தெரியுமா?
Advertisment
இயக்குனர் பார்த்திபனின் முதல் படமாக புதிய பாதை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விக்ரமன். தொடர்ந்து 1990-ம் ஆண்டு வெளியான புது வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 5 ஆண் ஒரு பெண் கேரக்டரை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. முரளி, சித்தாரா, சுரேஷ், ஆனந்த் பாபு, சார்லி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
புது வசந்தம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விக்ரமன் அடுத்து இயக்கிய படம் பெரும்புள்ளி. இந்த படம் தோல்வியாக முடிந்த நிலையில், அடுத்து கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம் என 2 தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த விக்ரமன் அடுத்து இயக்கிய படம் புதிய மன்னர்கள். கல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் என்ன நடக்கும் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில், விக்ரம், மோஹினி, விவேக், வினு சக்ரவர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த்து. படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகளின் போது, ஏ.ஆர்.ரஹ்மான் படம் குறித்து விக்ரமனிடம பேசியுள்ளார். இந்த படம் ஒரு சீரியஸான படம். ஆனால் சீரியஸ் காட்சிகள் வரும்போதெல்லாம், பழைய பாடல்கள் வந்து படத்தின் திரைக்கதைக்கு தடையை ஏற்படுத்துகிறது. அந்த பாடல்கள் இல்லை என்றால் படம் சரியான படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத இயக்குனர் விக்ரமன், அந்த படத்தை அப்படியே வெளியிட்டுள்ளார். ஆனால், படம் பெரிய தோல்விப்படமாக மாறியது. சமீபத்தில் ஒரு பேட்டியில் இது பற்றி கூறிய விக்ரமன், ஏ.ஆர்.ரஹ்மான் அப்போவே சொன்னார். நான் கேட்கவில்லை. அவர் சொன்னது 100 சதவீதம் உண்மையான வார்த்தை. படத்தின் தோல்வியை அன்றே கணித்தார். ஆனால் நான் அதை கண்டுகொள்ளவில்லை. இப்போது வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.