ராணுவ வீரருடன் மோதும் பிச்சைக்காரன், விளையாட்டு பையன்: தீபாவளி ரிலீஸில் உங்கள் பேவரெட் எந்த படம்?

2024- தீபாவளி தினத்தை முன்னிட்டு தமிழில் 3 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2024- தீபாவளி தினத்தை முன்னிட்டு தமிழில் 3 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Diwali Release2024

சினிமாவும் பண்டிகை நாட்களும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் என்று சொல்லலாம். வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்கள் வெளியானாலும் பண்டிகை நாட்களில், முன்னணி நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் பெரிய நடிகர்களில் படங்கள், படப்பிடிப்பு தொடங்கும்போதோ அல்லது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடக்கும்போதோ ஏதாவது ஒரு பண்டிகை நாளில் படம் வெளியாகும் என்று அறிவித்துவிடுவார்கள்

Advertisment

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கலைக்கட்ட தொடங்கியுள்ளது. இன்னும் இடையில் ஒரு நாளே உள்ள நிலையில், தீபாவளி தினத்தில் வெளியாக உள்ள தமிழ் படங்களில் பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம்.

அமரன்

Amaran Siva

Advertisment
Advertisements

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள படம் அமரன். மறைந்த முன்னாள் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி, நாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர்கள் பலர் நடித்துள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.

பிளாடி பெக்கர்

bloody

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக இருக்கும் கவின் நடிப்பில் தயாராகியுள்ள படம் பிளாடி பெக்கர். ஜெயிலர் படத்தின் மூலம் பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தை, சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்கியுள்ளார். ஜென் மார்ட்டின் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்தில் ரெட்டின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படமும் அக்டோபர் 31-ந் தேதி வெளியாக உள்ளது.

பிரதர்

Brother

சமீப காலமாக பெரிய வெற்றிக்காக போராடி வரும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் தான் பிரதர். சிவா மனசில சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி என காமெடி படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் நடிகை பூமிகா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த 3 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி நேரத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: