கடந்த காலங்களில் ஒரு படம் திரையரங்கில் வெளியானால் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும். அதேபோல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக வருடக்கணக்கில் ஆகும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகிவிட்ட நிலையில், திரையரங்குகளில் வெளியான ஒரு சில வாரங்களில் தொலைக்காட்சிகளிலும் திரையிடப்படுகிறது.
இதில் குறிப்பாக பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியிடுவது இன்றைய காலக்கட்டங்களில் சாதாரணமாக ஒரு நிகழ்வாக இருந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த பண்டிகையை முன்னிட்டு ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.
வாத்தி – வாரிசு – ஜெயிலர் : சன்டிவி
அந்த வகையில் சன்டிவியில். சன்டிவியில், தனுஷ் நடிப்பில் வாத்தி, படம் வெளியாக உள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கியிருந்தார். சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய் குமார் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
அதேபோல் விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியான வாரிசு படமும் சன்டிவியில் வெளியாக உள்ளது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிய இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ராஷ்மிகா மந்தனா ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்த இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் சன்டிவியில் தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், ஷாக்கி ஷெரப் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார்.
பிச்சைக்காரன் 2 – போர் தொழில் : ஸ்டார் விஜய்
விஜய் ஆண்டனி இயக்கம் தயாரிப்பு நடிப்பு, எடிட்டிங், இசை உள்ளிட்ட பணிகளில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஸ்டார் விஜய் டிவியில் தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது. நடப்பு ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்ற முக்கிய படம் போர் தொழில். சரத்குமார் அசோக் செல்வன் இணைந்து நடித்த இந்த படம் தீபாவளி தினத்தில் ஸ்டார் விஜய் டிவியில் வெளியாக உள்ளது.
துணிவு – கலைஞர் டிவி
பொங்கல் தினத்தை முன்னிட்டு அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய துணிவு திரைப்படம் தீபாவளி தினத்தில் கலைஞர் டிவியில் வெளியாக உள்ளது. வங்கியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைகக்ப்பட்டிருந்த இந்த படத்தில் மஞ்சுவாரியார் நாயகியாக நடித்திருந்தார். சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திரையரங்கில் வெளியாகும் படங்கள்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - ராகவாலாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் நிமிஷிகா சாஜன், சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நவம்பர் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜப்பான்
குக்கூ படத்தின் இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ஜப்பான். கார்த்தி , அனு இமானுவேல் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், சுனில், விஜய் மில்டன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படம் நவம்பர் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
ரைடு
விக்ரம் பிரபு - ஸ்ரீதிவ்யா இணைந்து நடித்துள்ள படம் ரைடு. கார்த்தி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஹாலிவுட்டில் தி மார்வெல்ஸ், இந்தியில் சல்மான் கான் நடிப்பில் டைகர் 3 ஆகிய படங்கள் தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“