'என் புருஷன பத்தி தப்பா பேசுனா வெட்டி போட்டுடுவேன்'; மேடையில் அசத்திய சிம்ரன்:அரங்கமே அதிர்ந்த நிகழ்ச்சி!

ராஜா ராணி படத்தில் தான் தீபா வெங்கட் நயன்தாராவுக்கு குரல் கொடுத்தார். அதன்பிறகு, தனி ஒருவன், மாயா, இது நம்ம ஆளு, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

ராஜா ராணி படத்தில் தான் தீபா வெங்கட் நயன்தாராவுக்கு குரல் கொடுத்தார். அதன்பிறகு, தனி ஒருவன், மாயா, இது நம்ம ஆளு, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
deepa venkatt simran

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ள நடிகை, தீபா வெங்கட், விருது நிகழ்ச்சி ஒன்றில், நடிகை சிம்ரன் வாய் அசைக்க, அதற்கு பக்கவாக குரல் கொடுத்து அசத்தியுள்ளர், இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

1994-ம் ஆண்டு வெளியான பாசலர்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தீபா வெங்கட். அதன்பிறகு உல்லாசம், பார்த்தாலே பரவசம், தில், ரஜினியின் பாபா, பார்த்திபனின் குடைக்குள் மழை, விஷாலுடன் மலைக்கோட்டை, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள தீபா வெங்கட் கடைசியாக சுந்தர்.சி நடிப்பில் வெளியான வாடா என்ற படத்தில் நடித்திருந்தார். தில் படத்தில் விக்ரமின் தங்கை கேரக்டரில் தீபா வெங்கட் அற்பதமாக பொருந்தி இருந்தார்.

சினிமா மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ள தீபா வெங்கட், 1996-ம் ஆண்டு இப்படிக்கு தென்றல் என்ற சீரியலில் நடித்திருந்தார். அதன்பிறகு கோலங்கள் சீரியலில் நாயகியாக நடித்த தேவயானிக்கு தோழியாக நடித்து அசத்திய தீபா வெங்கட் இந்த கேரக்டரில் நடித்ததற்காக பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். ராதிகா நடித்த சித்தி, அண்ணாமலை உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த தீபா வெங்கட், கடைசியாக 2010-ம் ஆண்டு மைதிலி என்ற சீரியலில் நடித்திருந்தார்.

2000-ம் ஆண்டு வெளியான பிரஷாந்தின் அப்பு திரைப்படத்தின் மூலம் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக களமிறங்கிய தீபா வெங்கட், சினேகா, மீனா, ஜோதிகா, சிம்ரன்’, நவ்யா நாயர், வித்யா பாலன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். இவர் குரல் கொடுத்த அனைத்து நடிகைகளுமே ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் தான். குறிப்பாக நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

Advertisment
Advertisements

ராஜா ராணி படத்தில் தான் தீபா வெங்கட் நயன்தாராவுக்கு குரல் கொடுத்தார். அதன்பிறகு, தனி ஒருவன், மாயா, இது நம்ம ஆளு, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். அதேபோல் இவர் குரல் கொடுத்த முன்னணி நடிகைகளில் ஒருவர் சிம்ரன், கன்னத்தில் முத்தமிட்டால் தொடங்கி ஏழுமலை, வாரணம் ஆயிரம், ரமணா, ஒற்றன்  உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிம்ரன் தீபா வெங்கட்டுக்கு விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சிம்ரன் வாய் அசைக்க, தீபா வெங்கட் குரல் கொடுத்து அசத்தினார். இதில் ஏழுமலை படத்தில் அர்ஜூன் அண்ணன்களிடம் சிம்ரன் பேசும் ஒரு காட்சியும், வாரணம் ஆயிரம் படத்தில், வரும் காதல் காட்சியையும் குரல் கொடுத்து அசததியுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Deepa tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: