Advertisment

இந்தி சினிமாவில் சாதித்த தமிழ் இயக்குனர் : ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவர் ; இவரை யார்னு தெரியுதா?

இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக மாற்றிய இயக்குனர் ஒருவரின் சிறுவயது புகைப்படம். இவரை யார்னு தெரியுமா?

author-image
WebDesk
New Update
Atlee Childhood

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில் பயணத்தை தொடங்கி தற்போது இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஒருவரின் சிறுவயது புகைப்படம் இணயைத்தில் வைரலாகி வருகிறது. இவர் யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

Advertisment

இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் தங்களின் விருப்பமான ஹீரோ ஹீாரோயின் ஆகியோரின் விபரங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்களுக்கு பிடித்தமான நட்சத்திரத்தின் ஒரு சிறு தகவல் கூட அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுப்பது போன்று எடுத்துக்கொள்வார்கள்.

அந்த வகையில் ன் நடிகர் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அதேபோல் தற்போது ஒரு நட்சத்திர இயக்குனரின் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு இவர்யார் என்று தெரியுமாஇவரை யார்னு கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று கூறி வருகிறார்கள். இந்த நட்சத்திரம் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா? 

பிரம்மாண்ட இயக்குனரிடம் உதவியாளராக இருந்து, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர். அடுத்தடுத்து கொடுத்த தொடர் வெற்றிப்படங்கள் காரணமாக பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவரின் அடுத்த படத்தில் யார் ஹீரோ என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் யார் தெரியுமா? அவர் தான் இயக்குனர் அட்லீ.

Atlee, Atlee speech, Atlee speech trimmed, Jawan Audio Launch, Sun Tv, Thalapathy vijay, Vijay,kalanithi maran, அட்லீ, அட்லீ பேச்சு, கலாநிதி மாறன், சன் டிவி, ஜவான், ஜவான் ஆடியோ லாஞ்ச், ஜவான் இசை வெளியீட்டு விழா, தளபதி விஜய், விஜய், Sun TV explains to Vijay Fans angry, edited speech of Atlee about Vijay in Jawan audio launch

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, அடுத்து விஜய் நடிப்பில், தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். இதன் பிறகு இந்தியில் இயக்குனராக அறிமுகமான அட்லீ, ஷாருக்கான நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் பாலிவுட் சினிமாவில் பெரிய வசூல் வேட்டை நடத்தியது.

இதன் மூலம் இந்தி சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ள அட்லீ அடுத்து இயக்கும் படம் என்ன? அந்த படத்தில் யார் ஹீரோ என்பது தொடர்பான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இவரது திரைப்படங்கள் வெளியாகும்போது பழைய படங்களின் காப்பி என்று விமர்சனங்கள் எழுந்தாலும், அட்லீ இயக்கத்தில் வெளியான 5 படங்களுமே வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Atlee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment