விஜய் படத்தில் டப்பிங் குரல், பாடல் பாடியவர்; இந்த சிறுமி விஜயின் தோழியாகவும் நடித்தவர்; யார் தெரியுமா?

விஜய் நடித்த படத்தில் பாடல் பாடியது, நாயகிக்கு டப்பிங் குரல் கொடுத்தது, அவருடனே இணைந்து நடித்தவர் இந்த சிறுமி. யாருனு கண்டுபிடிங்க பார்க்கலாம்.

விஜய் நடித்த படத்தில் பாடல் பாடியது, நாயகிக்கு டப்பிங் குரல் கொடுத்தது, அவருடனே இணைந்து நடித்தவர் இந்த சிறுமி. யாருனு கண்டுபிடிங்க பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Andrea Childhood

தமிழ் சினிமாவில், நடிகை, பாடகி, டப்பிங் கலைஞர் என பன்முக திறமையுடன் வலம் வரும் ஒரு நட்சத்திரத்தின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த நடிகை தனது முதல் படத்திலேயே சீனியர் நடிகருக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், அந்த படத்தில் 4 வயது குழந்தைக்கு அம்மா கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். பெரும்பாலும் இவர் தமிழில் நடித்த பல படங்கள் வெற்றியை பெற்றுள்ளது.

Advertisment

அந்த நட்சத்திரம் யார் என்று தெரிகிறதா? அவர் தான் நடிகை ஆண்ட்ரியா. 2007-ம் ஆண்டு கௌதம்மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சீனியர் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், தனது முதல் படத்திலேயே 4 வயது குழந்தைக்கு அம்மா கேரக்டரில் நடித்து அசத்தியவர். அடுத்து இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்ல.  

தொடர்ந்து 3ஆண்டுகள் கழித்து 2010-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். கார்த்தி ரீமாசென் பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம், வெளியானபோது வரவேற்பை பெறவில்லை என்றாலும், தற்போது பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். அதன்பிறகு அஜித்துடன் மங்காத்தா, கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், அரண்மனை, இது நம்ம ஆளு, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

ஆண்ட்ரியா நாயகியாக நடித்த படங்களை விட, அவர் முக்கிய கேரக்டரில் நடித்த படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்துள்ளது. அந்த வகையில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன், வெற்றிமாறனின் வட சென்னை, விஜயின் மாஸ்டர், அரண்மனை 3, உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது தற்போது ஆண்ட்ரியா, மனுஷி, கா, பிசாசு 2, நோ என்ட்ரி, மாஸ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment
Advertisements

Andrea Clicks

வேட்டையாடு விளையாடு முதல் சமீபத்தில் வெளியாக அஜித்தின் விடா முயற்சி படம் வரை ஒரு சில படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ள ஆண்ட்ரியா, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தில், நடிகை டாப்சிக்கும், நண்பன் படத்தில் நடிகை இலியானாவுக்கும் குரல் கொடுத்துள்ளார். துப்பாக்கி படத்தில் வந்த கூகுள் கூகுள் பாடல் முதல், புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்றீயா மாமா பாடல் வரை பல பாடல்களை பாடியுளள் ஆண்ட்ரியா சிறுவயதில் தனது பெற்றோருடன் எடுத்துக்கொண்ட போட்டோ என்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இது ஆண்ட்ரியாதானா? அவரது அம்மா மாதிரியே இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்.  விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடலை பாடிய ஆண்ட்ரியா, நண்பன் படத்தில் இலியானாவுக்கு டப்பிங், கொடுத்தார், அதேபோல் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார். 

Andrea Jeremiah

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: