Advertisment

வசூலில் மாஸ் காட்டும் மஞ்ஜூமேல் பாய்ஸ் : குணா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய ரசிகர்கள் கோரிக்கை

மஞ்ஜூமேல் பாய்ஸ் 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Guna and Manjummel Boys.jpg

குணா படத்தில் கமல்ஹாசன் - ரோஷினி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மலையாள திரைப்படமாக மஞ்ஜூமேல் பாய்ஸ் படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கமல்ஹாசன் நடித்த குணா படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisment

கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட மஞ்ஜூமேல் பாய்ஸ் திரைப்படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ந் தேதி வெளியான இநத படம், கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டது.

இத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் தமிழக பாக்ஸ் ஆபீஸ் வசூலை மிஞ்சும் வகையில், மஞ்ஜூமேல் பாய்ஸ் திரைப்படம் வசூலில் மாஸ்காட்டி வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் குணா குகையில் தவறி விழுந்த தங்களது நண்பன் ஒருவனை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து எப்படி மீட்டார்கள் என்பதே இந்த படத்தின் கதை.

1991-ம் ஆண்டுக்கு முன் டெவில்ஸ் கிச்சன் என்று அழைக்கப்பட்ட இந்த குகையில் குணா படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டவுடன் குணா குகை என்று அழைக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானலில், முக்கிய சுற்றுலா தலாமாக இருக்கும் இந்த பகுதியில் தான் கமல்ஹாசன் தனது குணா படத்திற்கான பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளார். சந்தான பாரதி இயக்கத்தில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான குணா படம் கமல்ஹாசனின் நடிப்புக்காக பாராட்டுக்களை பெற்றிருந்தாலும், வசூலில் தோல்வியை சந்தித்தது.

அதே சமயம் இளையராஜா இசையில் வெளியான இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக குகையில் இருந்து ‘’கண்மணி அன்போட காதலன்’’ என்ற அந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் ஒரு பாடலாக வலம் வருகிறது. குணா குகை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளியாகியுள்ள மஞ்ஜூமேல் பாய்ஸ் படத்தில் கூட இந்த பாடல் இடம்பெற்றிருக்கும். மஞ்ஜூமேல் பாய்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், இன்றைய சினிமா ரசிகர்கள் மத்தியில் குணா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தற்போது குணா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மஞ்ஜூமேல் பாய்ஸ் திரைப்படம் மலையாள மொழியில் எடுக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்திலும் படம் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சலாம் படத்தின் வசூலை விரைவில் மஞ்ஜூமேல் பாயஸ் முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் குணா படம் இல்லை என்றால் மஞ்ஜூமேல் பாய்ஸ் படம் இல்லை என்று சொல்லலாம்.

டெவில்ஸ் கிச்சன் என்று அழைக்கப்பட்ட அந்த குகை குணா படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட பின்னர்தான் பிரபலமாகி சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக மாறியது. அதை வைத்து பார்க்கும்போது மஞ்ஜூமேல் பாய்ஸ் படத்தின் முன்னோடி குணா தான். அதனால் தான் ரசிகர்கள் மத்தியில் குணா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment