எம்.ஜி.ஆர் என்னை கட்டிக்கிறியானு கேட்டாரு; நான் அப்போ சின்ன பொண்ணு; பிரபல இயக்குனர் மகள் த்ரோபேக் தகவல்!
பி.ஆர்.பந்தலு மகன் பி.ஆர்.ரவி சங்கர் அப்பாவை போலவே இயக்குனராக மாறிவிட்டார். ஆனால் மகள், ஆசிய கண்டத்தின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
பி.ஆர்.பந்தலு மகன் பி.ஆர்.ரவி சங்கர் அப்பாவை போலவே இயக்குனராக மாறிவிட்டார். ஆனால் மகள், ஆசிய கண்டத்தின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
எனது அப்பா பிரபலமான இயக்குனராக இருந்தால், அவரை பார்க்க, பலரும் வருவார்கள். அப்போது எம்.ஜி.ஆர் என்னை கட்டிக்கிறியா என்று என்னிட்டம் கேட்டார் என பிரபல இயக்குனர் பி.ஆர். பந்தலுவின் மகளும், ஒளிப்பதிவாளருமான பி.ஆர்.விஜயலட்சுமி கூறியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் ஏராளமான புராண படங்களை இயக்கியவர் தான் பி.ஆர்.பந்தலு, இயக்குனர், தயாரிப்பாளர், நாடக நடிகர் என பன்முற திறமையுடன் வலம் வந்த இவர், சிவாஜிக்கு கர்ணன், எம்.ஜி.ஆருக்கு ஆயிரத்தில் ஒருவன் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார், இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இதில் மகன் பி.ஆர்.ரவி சங்கர் அப்பாவை போலவே இயக்குனராக மாறிவிட்டார். ஆனால் மகள், ஆசிய கண்டத்தின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
1985-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கததில் வெளியான சின்ன வீடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான பி.ஆர்.விஜயலட்சுமி, அதன்பிறகு, விஜயகாந்த், பிரபு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் பாட்டு பாடவா, அபி அண்ட் அனு என இரு படங்களை இயக்கியுள்ள பி.ஆர்.விஜயலட்சுமி, எம்.ஜி.ஆர், மற்றும் சிவாஜி உள்ளி்ட்ட முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் வீட்டுக்கு வந்தது, தன்னுடன் பழகிய அனுபவம் குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி
Advertisment
Advertisements
எனது அப்பா இருக்கும்போது எம்.ஜி.ஆர், சிவாஜி என அனைவரும் வீட்டுக்கு வருவார்கள். நான் அப்போது சின்ன பிள்ளை, கதவுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு அவர்களை பார்த்துக்கொண்டு இருப்பேன். சிவாஜி பெரிய பெரிய கண்ணை வைத்துக்கொண்டு என்னை பயமுறுத்துவார். சண்டை காட்சிகளை எடிட்டிங் செய்ய எம்.ஜி.ஆர் தான் வருவார். அப்போது என் அம்மாவை பார்த்துவிட்டு தான் போவார். அப்போது நான் என் அம்மா பின்னாடி ஒளிந்துகொண்டு இருப்பேன். அவர் என்னை பார்த்து கட்டிக்கிறியா என்று கேட்பார்.
அதேபோல் நம்பியார் சாமி, என்னிடம் ஐக்யூ கேள்விகள் நிறைய கேட்பார். ஆனால் அவர் கேட்கும் ஒரு கேள்விக்கு கூட என்னால் பதில் சொல்ல முடியாது. பதில் தெரியாது. எங்க அப்பா முன் என்னை இப்படி ஒரு மண்டு மாதிரி காட்டுகிறாரே என்று எனக்கு கடுப்பாக வரும். அதனால் நம்பியார் அங்கிள் வரும்போது மட்டும் நான் அவரை பார்க்கவே மாட்டேன். இப்படி பல நடிகர்கள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள் என்று பி.ஆர்.விஜயலட்சுமி கூறியுள்ளார்.