/indian-express-tamil/media/media_files/67vbyIHNwv5RdOPtjnFF.jpg)
தமிழ் சினிமாவின் முதல் ஜல்லிக்கட்டு பாடல்
தமிழ் சினிமாவின் முதல் ஜல்லிக்கட்டு பாடலை எழுதிய கவியரசர் கண்ணதாசன் அதில் எஸ்.எஸ்.ராஜேந்திரனை கிண்டல் செய்வது போன்ற வரிகளை வைத்து அசத்தியிருப்பார். 6 பாடகர்கள் இணைந்து பாடிய இந்த பாடல் பலரும் அறியாத ஒரு பாடலான உள்ளது.
1965-ம் ஆண்டு இயக்குனர் பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பழநி. 1962-ம் ஆண்டு கன்னத்தில் வெளியான பூதான்னா என்ற படத்தின் ரீமேக்கான வெளியான இந்த படத்தில் சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், தேவிகா, நாகேஷ், பாலையா உள்ளிட்ட பல முன்னணி நடச்த்திரங்கள் நடித்திருந்தனர்.
படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்திருந்தனர். படத்தில் வெளியான அத்தனை பாடல்களையும் கவியரசர் கண்ணதாசனே எழுதியிருந்தார். இந்த படத்தில் கண்ணதாசன் எழுதிய அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பாடலாக நிலைத்திருக்கிறது.
அதேபோல் அண்ணாச்சி வேட்டி என்ற பாடல் பலரும் மறந்துவிட்ட ஒரு பாடலாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில், ஜல்லிக்கட்டு பாடல் என்றால் பெரும்பாலானவர்களுக்கு முதலில் நனைவுக்கு வருவது முரட்டுக்காளை படத்தில் இடம் பெற்ற பொதுவாக என் மனசு தங்கம் பாடல் தான். ஆனால் அதற்கு முன்பே 1965-ம் ஆண்டு வெளியான பழநி படத்தில் ஜல்லிக்கட்டின் பெருமைகளை பேசிய பாடலான அண்ணாச்சி வேட்டி என்ற பாடல் உள்ளது பலரும் அறியாதது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் சிவாஜி, முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து தங்களது காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்து செல்வார்கள். அப்போது ஜல்லிக்கட்டு பற்றி புகழ்ந்து பேசும்படியும் காளைகளை எங்கு தொட்டால் என்ன நடக்கும் என்பது பற்றியும் மிகவும் அழகான வரிகளுடன் இந்த பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார்.
டி.எம்.சௌந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், ஏ.எல்.ராகவன், கே.ஆர்.எஸ்.சாமி, எல்.ஆர்.ஈஸ்வரி என 6 பேர் இணைந்து பாடிய இந்த பாடல், தமிழ் சினிமாவில் அமைந்த முதல் ஜல்லிக்கட்டு பாடல். வீரம் நகைச்சுவை, காளைகளின் பெருமை என இருக்கும் இந்த பாடலின் இறுதியில், எஸ்.எஸ்.ஆர்ரின் முறை பெண்ணான தேவிகாவின் தூண்டுதலால் காளையை அவர் அடக்கி விடுவார். 6 பேர் இணைந்து பாடிய இந்த பாடல் ஜல்லிக்கட்டின் அடையாள பாடல் என்று சொன்னால் அது மிகையாகாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.