பிரபல நாட்டுப்புற பாடல் தம்பதியான புஷ்பவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி இருவரும் தங்களது வாழ்வில் நடந்த சோகமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் நாட்டுப்புற பாடல் என்றால் உடனடியாக நினைவுக்கு வரும் ஒரு சிலரில் முக்கியமானவர் புஷ்பவனம் குப்புசாமி ஒரு சில திரைப்படங்கள் நடித்துள்ள இவர், சேரனின் சொல்ல மறந்த கதை படத்தில் காமெடி நடிகராக நடித்திருந்தார். இவரது மனைவி அனிதா குப்புசாமி. நாட்டுப்புற பாடகியான இவரும் தனது கணவருடன் இணைந்து பல பாடல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் பாடியுள்ளார்.
தற்போது பாடல் பாடுவதில் மட்டுமல்லாமல் வீட்டில் மாடித்தோட்டம் எப்டி அமைக்க வேண்டும், அவற்றை எப்படி பராமரிக்க வேண்டும் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் தங்களது வீட்டில் மாடித்தோட்டம் வளர்த்து அது தொடர்பான வீடியோக்களை தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகின்றனர் அதேபோல் ஆன்மீகம் தொடர்பான தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை பல்கலைகழகத்தில் தன்னுடன் படித்த புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பல பாடல்கள் பாடியுள்ள அனிதா அவருடன் நட்பாக பழகி பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பல்லவி என்ற ஒரு மகள் இருக்கிறார். அதேபோல் தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டதாகவும் அதேபோல் தனக்கு ஆண் குழந்தை பிறந்தது என்றும் தற்போது அனிதா குப்புசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், பல்லவி பிறந்த சில ஆண்டுகளில் தனக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அனிதா பிரசவ மயக்கத்தில் இருந்தபோது மருத்துவர்கள் தவறான ஊசி செலுத்தியதால் குழந்தை இறந்து விடடதாகவும், அதன்பிறகு தங்களது மகள் தனியாக இருக்க கூடாது இனிமேல் எத்தனை குழந்தை பிறந்தாலும் பிறக்கட்டும் என்று வேண்டிக்கொண்டோம்.
ஆனால் அடுத்து மருத்துவரிடம் பரிசோதனை செய்து பார்த்தபோது இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலை இல்லை என்று தெரியவந்தது. உடலில் ஏற்பட்ட சிறு பாதிப்பினால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். அனிதா குப்புசாமியின் நிலையை பேட்டியின் மூலம் தெரிந்துகொண்ட பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil