எம்ஜிஆருக்கு பாராட்டு விழா… என்ட்ரி கொடுத்த ரஜினி, கமல், ஸ்ரீதேவி – வைரல் வீடியோ

Tamil Cinema Update : எம்ஜிஆர் இறந்து ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றளவும் மக்கள் மத்தியில் போற்றப்படும் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

Tamil Cinema Update : தமிழ் சினிமாவில் தனது ஆளமையாலும் கருத்துக்களுடன் கூடிய திரைப்படங்களாலும் கவர்ந்து இழுந்தவர் எம்ஜிஆர். நலிவடைந்த மக்களின் வாழ்வியல் தொடர்பாக பல படங்களில் நடித்துள்ள எம்ஜிஆர் மக்கள் மத்தியில் புரட்சித்தலைவர் என்று போற்றப்படுகிறார். சினிமா என்ற ரீல் வாழ்க்கை மட்டுமல்லாது ரியல் வாழ்கையிலும் தனது வாழ்வின் இறுதிகாலம் வரை மக்களுக்காக தொண்டாற்றியவர் எம்ஜிஆர்.

அரசியில் பெரும் புரட்சி செய்த இவர். தொடர்ந்து இருமுறை முதல்வராக இருந்த பெருமையை பெற்றுள்ளார். மேலும் தான் முதல்வராக இருந்த காலகட்டத்தில் மக்களுக்காக ஏராளமான நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். தன் வாழ்நாளில் இறுதி மூச்சுவரை மக்களுக்காக பணியாற்றிய எம்ஜிஆர் இறந்து ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றளவும் மக்கள் மத்தியில் போற்றப்படும் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

வரும் ஜனவரி 17-ந் தேதி எம்ஜிஆரின் பிறந்த நாள் வெகுஜன மக்களால் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் அரசியல் பிரபலங்கள் தங்களது தொகுதியில் உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்வது வழக்கம். அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களது பகுதியில் எம்ஜிஆர்ரின் புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து வழிபடும் நிலை இன்றும் தொடரப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் தனது சமூக பணி மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்துள்ள எம்ஜிரின் அரிய வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர்ருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன்’, நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழா தொடர்பான வீடியோ காட்சி தற்போது வைரலாகி வரும் நிலையில்ஷ. எம்ஜிஆர்ரின் ரசிகர்கள் அதிமுகவின் தொண்டர்கள் என பல தரப்பினரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema formar cm mgr viral video with tamil cinema actors

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com