Advertisment

ஜாடிக்கேத்த மூடியாக விஜய்க்கு பொருந்திய நடிகை இவர்; ஆனா த்ரிஷா இல்லை: கண்டுபிடிங்க பார்க்கலாம்!

இந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் விஜய் அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Asin 12
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த ஒரு நடிகையின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சமூகவலைதளங்களில் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ள இன்றைய காலக்கட்டத்தில் பிரபலங்கள் பலரும் தங்களது சிறுவது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகின்றனர். மேலும் இவர் யாரென்று தெரிகிறதாஎன்ற கேள்வியுடன் பல முன்னணி நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்திதெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும்தமிழில் விஜய் அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அந்த நடிகை வேறு யாருமில்லை. நடிகை அசின் தான். 2004-ம் ஆண்டு வெளியான எம்.குமரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து உள்ளம் கேட்குமே என்ற படத்தில் நடித்திருந்தார்.

asin, actress, rahul sharma, girl baby

சூர்யவுடன் கஜினி, வேல், விஜயுடன் சிவகாசி, போக்கிரி, காவலன்,அஜித்துடன் ஆழ்வார், வரலாறு, கமல்ஹாசனுடன் தசவதாரம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள அசின், கடைசியாக 2015-ம் ஆண்டு இந்தியில் வெளியான ஆல் ஈஸ் வெல் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில் காவலன் படமே இவர் நடித்த கடைசி படமாகும். ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்ட அசினுக்கு ஒரு குழந்தை உள்ளது.

சாமி படத்தின் தெலுங்கு ரீமேக்கான லட்சுமி நரசிம்ம சாமி படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அசின் அவ்வப்போது தனது மகள் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், இதனிடையே தற்போது அவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Asin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment