Advertisment

பொன்னியின் செல்வன் 2 முதல் ஜெயிலர் வரை... 2023-ம் ஆண்டை ஆக்கிரமிக்கும் படங்கள்

பொன்னியின் செல்வன் 2, அயலான் மற்றும் சூர்யா 42 என 2023 தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிறைய காத்திருக்கிறது. இது கோலிவுட்டுக்கு நம்பிக்கைக்குரிய ஒன்று என சொல்லலாம்.

author-image
WebDesk
New Update
பொன்னியின் செல்வன் 2 முதல் ஜெயிலர் வரை...  2023-ம் ஆண்டை ஆக்கிரமிக்கும் படங்கள்

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் பழையபடி தங்களது வருமானத்தை பெருக்கவில்லை என்றாலும் கூட 2022-ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது. கொரோனா காலத்தில் ஒடிடி ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டாலும் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்ககை வழக்கமானதாகவே உள்ளது.

Advertisment

இருப்பினும், கடந்த ஆண்டு விக்ரம், பொன்னியின் செல்வன் 1, மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற சில வெற்றிப்படங்கள் தியேட்டர் வியாபாரத்திற்கு நஷ்டமில்லை என்பதை நிரூபித்தன. கடந்த ஆண்டு கொடுத்த வெற்றியின் தொடர்ச்சி 2023-ம் ஆண்டும் எதிர்பார்க்கலாம். மேலும், 2023 ஆம் ஆண்டு ரசிகர்களுக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் ஒரு நல்ல ஆண்டாக மாற்றக்கூடிய நம்பிக்கைக்குரிய படங்கள் உள்ளன.

வாரிசு, ஜனவரி 12

விஜய் 2023 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் நடப்பு ஆண்டின் தனது முதல் படத்தை வெளியிடுவதால் இது தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான தொடக்கமாகும். வம்சி பைடிப்பள்ளி இயக்கிய வாரிசு, பொங்கல் விடுமுறை காலத்தில் வெளியாக உள்ளது.  விஜய் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முழுநேர குடும்ப படத்தில் நடித்துள்ளார். இதனால் ஃபேமிலி ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு பெரி ட்ரீட்டாக அமையும்.

துனிவு, ஜனவரி 12

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் மற்றொரு படம் அஜித்தின் துணிவு. எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களாக விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகவது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரு நடிகர்களின் ரசிகர்களும் தீவிர ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அனைவரிடமும் பெரும் விவாதத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் நெடீவ் ரோலில் நடித்துள்ள படம் துணிவு.

பொன்னியின் செல்வன் 2, ஏப்ரல் 28

2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமான மணிரத்னத்தின் வரலாற்றுப் படம் பொன்னியின் செல்வன் 1. இப்படத்தின் 2-ம் பாகம் வரும் ஏப்ரல் 28-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் முதல் பாகத்தின் வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் மற்றும் கார்த்தி ஆகியோர் நடித்தள்ள இந்த படத்தை அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியில் செல்வன் நாவலில் இருந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2

கமல்ஹாசன் 2022 ஆண்டு விக்ரம் மூலம் மீண்டும் தனது ஆளுமையை நிரூபித்துள்ளார்.  விக்ரம் படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 400 கோடி ரூபாய் வசூலித்தது. 2023 இல், அவர் மற்றொரு அதிரடி படமான இந்தியன் 2 வெளியாக உள்ளது. 1996 வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 தயாராகி வருகிறது. முதல் பாகம் போராளியாக இருக்கும் சேனாபதி மற்றும் அவரது மகனைப் பற்றியதாக இருந்தாலும், இரண்டாம் பாகம் சேனாபதி மற்றும் அவரது தந்தையின் கதையை விவரிக்கும் விஷயங்களை பின்னோக்கி எடுத்துச் செல்லும்.

அயலான்

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படங்களில் இதுவும் ஒன்று. சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இந்தப் படம் ஒரு சைன்ஸ் திரில்லர் மற்றும் அமீர்கானின் பிகே மாதிரியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டைம் ட்ராவல் படமான நேற்று இன்று நாள் (2015) மூலம் அறிமுகமான இயக்குனர் ஆர் ரவிக்குமார், கடந்த ஏழு வருடங்களாக இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறார். காத்திருப்புக்கு பலன் இருக்கும் என்று நம்பலாம்

ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு எந்த படமும் வெளியாகாத நிலையில்,  தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இருந்த இடைவெளியை ரஜினிகாந்த் இந்த படத்தின் மூலம் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு போலீஸ் வார்டன் கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க முயல்வதைப் பற்றிய கதை என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார், வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நெல்சனின் கேரியரில் இந்தப் படம் ஒரு முக்கியமான மைல்கல், ஏனெனில் அவரது கடைசிப் படமான விஜய்யின் பீஸ்ட், சரியாக போகாததால்,ஜெயிலர் படத்தின் மூலம் இயக்குனர் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

தளபதி 67

இந்த முறை லோகேஷ் கனகராஜ் என்ன செய்யப் போகிறார்? விக்ரமை மிஞ்சுவாரா? படம் விக்ரம் படத்தின் ஒரு பகுதியா? என இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தைச் சுற்றி நிறைய கேள்விகள் உள்ளன, ஆனால் தயாரிப்பாளர்கள் எதைப்பற்றியும் வாய் திறக்கவில்லை. இந்த படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மற்ற தகவல்கள் ரகசியமாகவே உள்ளன. இந்த படம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிகப் பெரிய ஓப்பனிங்கைப் பெறப் போகிறது என்பதுதான் இந்தப் படத்தைப் பற்றிய பொதுவான தகவல்

சூர்யா 42

பாலா, வெற்றி மாறன், பா.ரஞ்சித் ஆகியோருடன் அவர் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வீரம், விஸ்வாசம் புகழ் இயக்குனர் சிவாவுடன் சூர்யா ஒரு படத்தை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். முழுக்க முழுக்க சிஜிஐ மூலம் உருவாக்கப்பட்டு வரும் சூர்யா 42 படத்தின் டீசர், மற்றும் கதை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சூர்யாவின் கேரியரில் பட்ஜெட்டில் மிகப்பெரிய படமாக உருவாகும் படம் சூர்யா 42 என்று கூறப்படுகிறது. சூர்யாவும் இவருடன் பான்-இந்தியக் களத்தில் குதிப்பது போல் தெரிகிறது.

விடுதலை

பட்டியலில் உள்ள மற்ற படங்கள் அனைத்தும் பெரிய பட்ஜெட் முயற்சிகள் என்றாலும், வெற்றி மாறனின் விடுதலை படம் வித்தியாசமானது. ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில், நகைச்சுவை நடிகர் சூரி, போலீஸ் கான்ஸ்டபிளாக கதாநாயகனாக நடிக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். வெற்றிமாறனின் அனைத்து படங்களும் புத்தகங்களை தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டு வெற்றி பெற்றன, கடைசியாக அசுரன் (பூமணியின் வெக்கையை அடிப்படையாகக் கொண்டது) தேசிய விருதுகளைப் பெற்றது (தனுஷுக்கான சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படம்). இயற்கையாகவே, வெற்றியின் மற்றொரு தழுவலுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

கேப்டன் மில்லர்

கடந்த வருடம் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் என்ன செய்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பெரிய பட்ஜெட்டில் ஆக்‌ஷன் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் இயங்கும் என்று கருதப்பட்டபோது, நடிகரும், இயக்குனருமான மித்ரன் ஜவஹர், ஒரு அப்பாவியான மற்றும் பாதிக்கப்படக்கூடிய ஹீரோவுடன் ஒரு குடும்ப படம் மக்களை அதிக எண்ணிக்கையில் திரையரங்குகளுக்கு அழைத்துச் செல்லும் என்பதை நிரூபித்து காட்டினார்.

ஒரு நிதானமான குடும்ப படத்துடன் கடந்த வருடத்தை முடித்த தனுஷ் தனுஷ் அடுத்து, ராக்கி புகழ் அருண் மாதேஷ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லரில் என்ன செய்வார் என்று நினைக்கும்போது உற்சாகமாக இருக்கிறது. தனுஷ் இதுவரை செய்யாத ஒரு வரலாற்று ஆக்‌ஷன் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment