புதுச்சேரி
புதுச்சேரியில் படபிடிப்புகள் அதிகளவில் நடக்கின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு,ஹிந்திபடங்கள்தொடங்கி பல்வேறு விளம்பர படப்பிடிப்புகளும் நடந்து வருகின்றன. முன்பு பாடல் காட்சிகள்தான் அதிகளவில் படம் பிடிக்கப்பட்டது. தற்போது சண்டைக்காட்சிகளும் அதிகளவில் படம்பிடிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில், 'லால் சலாம்’ தொடங்கி பல்வேறு வெப் சீரிஸ்களுக்காக சண்டைக் காட்சிகள் புதுச்சேரியில் இயங்காமல் இருக்கும் ஏஎப்டி தொழிற்சாலைக்குள் படமாக்கப்பட்டன. தற்போது வெளிப்பகுதிகளிலும் இந்த சண்டைக்காட்சிகளுடன் அபாயக்கர படப்பிடிப்புகள் நடக்கத் தொடங்கியுள்ளன. பழைய துறைமுக வளாகத்தில், 'வேட்டையன்' படத்துக்காக ஹெலி காப்டரில் ரஜினி வந்து இறங்கும் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கினர்.
தற்போது நடிகர் விஜய் நடிக்கும் 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் புதுச்சேரியில் நடந்து வருகின்றன. ஏஎப்டி பஞ்சாலை, கடற்கரை சாலை, பழைய துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடிகர் விஜய் நடித்த காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டன. தற்போது 'கோட்' படம் முடிவடைய உள்ள நிலையில் புதுவையில் இறுதி கட்ட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
புதுவை பழைய துறைமுக வளாகத்தில் நடைபெற்ற சண்டை காட்சியில் ஒரு கார் மற்றொரு கார் மீது விழுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பயங்கரமான சத்தம் கேட்டதால் ம பழைய துறைமுகத்துக்கு அருகில் உள்ள மக்கள் கடுமையாக அச்சமடைந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் தொடங்கி நேற்று நள்ளிரவு அதிகாலை வரை புதுச்சேரிகிழக்கு கடற்கரையில் சிவாஜி சிலை முன்பு கிழக்கு கடற்கரைச் சாலையின் சிக்னல் பகுதியான முக்கிய சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.
சுற்றிலும் குடியிருப்புகள் உள்ள நெருக்கமான இப்பகுதியில் நடுசாலையில் கார் வெடித்து தீப்பற்றி எரிவது போல் படமாக்கினர். சாலைகளை மூடிய பட குழுவினர் ஆங்காங்கே சைக்கிள்களை நிறுத்தினார்கள் பின்னர் காரை பயங்கர சத்தத்துடன் வெடிக்கச் செய்து தீ பற்றி எரிவது போன்று படமாக்கினர். இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில்,மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் அபாயகர படப்பிடிப்புக்களை நடத்த அரசு எப்படி அனுமதி தருகிறார்கள் என்பதே தெரியவில்லை. நள்ளிரவு நேரத்தில் சண்டைக்காட்சிகளால் மக்களுக்குதான் அதிகளவு பாதிப்பு மட்டுமல்ல பதற்றமும் ஏற்படுகிறது.
அதேபோல் போக்குவரத்து இதை அரசு நெரிசலான நேரத்திலும் படப்பிடிப்புக்கு எவ்வாறு அனுமதி தருகிறார்கள் என தெரியவில்லை. முக்கிய நடிகர்கள் படப்பிடிப்புக்கு வந்தாலே அப்பகுதி முழுக்க போக்குவரத்து நெரிசலாகி விடுகிறது. ஏற்கெனவே புதுச்சேரியில் நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்" என்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“