அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், படம் இப்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் அப்டேட் கொடுத்துள்ளார்.
துணி படத்திற்கு பிறகு நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். த்ரிஷா அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சமீபத்தில் வெளியான விடா முயற்சி திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. விடா முயற்சி படத்தை தொடர்ந்து அஜித், குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். மார்க் ஆண்டனி என்ற படத்தின் மூலம் பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ரசிகர்கள் மத்தியில் கலவையாக விமர்சனங்களை பெற்று வருகிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித் 3 கெட்டப்பில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் கொடுத்துள்ளார்.
குட் பேட் அக்லி படத்தில் முதலில் இசையமைப்பாளராக கமிட் ஆனவர் தேவி ஸ்ரீ பிரசாத். ஆனால் சமீபத்தில் இவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, நேற்று (டிசம்பர் 10) ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் அண்ணே குட் பேட் அக்லி எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
Oru celebration of life maari bgm ku dance shoot panna eppadi irukkum … semmaya irukkum la 😍🔥🔥🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) December 10, 2024
இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜி.வி.பிரகாஷ், ‘ஒரு செலிபிரேஷன் ஆஃப் லைப் மாரி பி.ஜி.எம்.-க்கு டான்ஸ் ஷூட் பண்ணா எப்படி இருக்கும் செம்மையா இருக்கும்ல’ என்று பதில் அளித்துள்ளார். இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.