சமூக சீர்த்திருத்த படம்... ஒற்றை வரியில் மகாபாரதம் : கண்ணதாசன் எழுதிய மெகாஹிட் பாடல்
1973-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் கௌரவம். வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கிய இந்த படத்தில் சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவின் கவியரசர் கண்ணதாசன், தனது பாடல்களில் மனிதனுக்கு தேவையான கருத்துக்களை கூறியதோடு மட்டுமல்லாமல் புராணங்களில் பற்றியும் தனது பாடல்களில் கூறியுள்ளார். அப்படி ஒரு பாடல் கௌரவம் படத்தில் இடம்பெற்றுள்ளர்.
Advertisment
1973-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் கௌரவம். வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கிய இந்த படத்தில் சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். உஷா நந்தினி, பண்டரிபாய், மேஜர் சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.
இதில் ரஜினிகாந்த் என்ற கேரக்டரில் நடித்திருந்த சிவாஜிக்கு குழந்தை இல்லாததால், தனது தம்பி மகனான கண்ணனை (சிவாஜி கணேசன்) எடுத்து வளர்த்து வருவவார். ரஜினிகாந்த் வக்கீலாக இருக்கும் நிலையில், கண்ணனையும் வக்கீலுக்கு படிக்க வைத்து தனது ஜூனியராக வைத்துக்கொள்வார். ஒரு கட்டத்தில், ரஜினிகாந்த் வாதாடும் ஒரு வழக்கில் அவருக்கு எதிராக கண்ணன் வாதாட வேண்டிய சூழல் ஏற்படும்.
அந்த நேரத்தில் ரஜினிகாந்த் தனது வளர்ப்பு மகன் தனக்கு எதிராக நிற்பதை நினைத்து பாடும் பாடல் தான் ‘’நீயும் நானுமா கண்ணா’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பல படங்களில் இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாடலை எழுதியபோது, இயக்குனர் பாடலுக்கான சூழ்நிலையை சொல்ல, கண்ணதாசன் உடனடியாக வரிகளை கொடுத்துள்ளார்.
குறிப்பாக இந்த பாடலில் வரும் ‘’அறிவை கொடுத்ததோ துரோனரின் கௌரவம் அவர் மேல் தொடுத்ததோ அர்ஜூனன் கெளரவம், நடந்தது அந்த நாள் முடிந்ததா பாரதம், நாளைய பாரதம் யார் அதன் காரணம்’’ என பாரதத்தின் கதையை தனது பாட்டில் வைத்திருந்தார் கண்ணதாசன். சமூக சீர்திருத்த கதையை கொண்ட இந்த பாடலில், புராணகாலத்தின் மகாபராத கதையை இணைந்து கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த காலக்கட்டத்தில் முன்னணி பாடகராக இருந்த டி.எம்.சௌந்திரராஜன் இந்த பாடலை பாடியிருந்தார்.