கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் காளையன். தொடர்ந்து ரஜினியுடன் பேட்ட, தனுஷூடன் ஜகமே தந்திரனம், கார்த்தியுடன் சுல்தான் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகர் காளையன் டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்துவை காரில் அழைத்துக்கொண்டு செல்லும் வீடியோ பதிவை தற்போது ஜி.பி.முத்து தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார். டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தற்போது தமிழ் திரையுலகில் கவனிக்கப்படும் ஒரு நபராக வலம் வருகிறார். தினமும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
மேலும் தனது யூடியூப் தளத்தில் வீடியோ பதிவையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வில்லன் நடிகர் காளைனுடன் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சியில் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் காளையன் தன்னை காரில் அழைத்து செல்வதாக கூறும் ஜி.பி முத்து, காரில் இருக்கும் பொருட்கள் குறித்து விவரிக்கிறார்.
காரில் முன்னாள் சாமி படம் மாட்டுவார்கள் ஆனால் இவர் குத்துச்சண்டை கையுறயை மாட்டி வைத்துள்ளார். அப்புறம் பாருங்க சின்னதா துப்பாக்கி வைத்துள்ளார் என்று ஜி.பி.முத்து கூறுகிறார். அதனைத் தொடர்ந் ஸ்ரீரங்கம் செல்லும் இவர்கள், அடுத்து ஹோட்டலில் சாப்பிடுகின்றனர். சாப்பிட்டு விட்டு மீண்டும் பயணத்தை தொடரும்போது காளையண்ணா சைவம் சாப்பிடுங்க வயிறு நல்லாருக்கும் என்று அட்வைஸ் பண்ணுகிறார்.
அதனைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் இவர்கள், சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியில் வரும்பொது அவர்களுடன் பலரும் போட்டோ எடுத்துக்கொள்கின்றனர். தொடந்து அங்கிருக்கும் நண்பர்கள் வீட்டுக்கு செல்லும் இவர்கள், அடுத்து மதுரை சென்று மீனாட்சி அம்மனை தரிசிப்போம் என்று கூறிக்கொண்டே காரில் செல்கின்றனர். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/