/indian-express-tamil/media/media_files/2025/09/13/simbu-gvp-2025-09-13-19-41-27.jpg)
சிம்புவும் நானும், ஸ்கூல் படிக்கும் போது இருந்தே நண்பர்கள் என்று கூறியுள்ள இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், வெற்றிமாறனுடன் அவர் இணையும் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், நடிகர் இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர், என பன்முக திறமை கொண்டவர் சிம்பு. சிறுவயதில் இருந்தே சினிமாவில், இருந்து வரும் இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவருக்கே டஃப் கொடுக்கும் வகையில், வந்தவர் தான் ஜி.வி.பிரகாஷ். அவரும் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பாடகர், நடிகர் என தமிழ் சினிமாவில் வலம் வருகிறார், சமீபத்தில் தேசிய விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது.
சிம்பு – ஜி.வி.பிரகாஷ் இருவரும் 2007-ம் ஆண்டு வெளியான காளை படத்தின் மூலம் இணைந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், படத்தின் பாடல்கள், மற்றும் பின்னணி இசை பலரின் மனதை கவர்ந்தது. குறிப்பாக வந்துட்டாண்டா காளை இசை சிம்பு ரசிகர்கள் மத்தியில் இன்றும், ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தும் இசையாக நிலைத்திருக்கிறது. தருண்கோபி இந்த படத்தை இயக்கியிருந்த நிலையில், சங்கீதா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்,
காளை படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜி.வி.பிரகாஷ் சிம்பு குறித்து பேசியுள்ளார். அதில், நானும் சிம்புவும் ஸ்கூல் படிக்கும்போது இருந்தே பழக்கம். நான் செட்டிநாடு படிக்கும்போது அவர் அஷ்ரம் பள்ளியில் படித்து வந்தார். பள்ளியில் நடக்கும் கல்ச்சுலஸ்ஸில் நாங்கள் எதிர் எதிர் அணியில் இருந்தோம். அப்போது அவர் என்னிடம் வந்து என்ன பண்ணப்போற என்ன பாட்டு என்று விசாரிப்பார்.
GVPrakash Confirms that he will be doing music for STR & Vertrimaaran's #STR49 film🎶🔥#GVPrakash & #SilambarasanTR reuniting after Kaalai🤝pic.twitter.com/gPrBGCTenx
— AmuthaBharathi (@CinemaWithAB) September 13, 2025
அவர் ட்ரம்ஸ் வாசிப்பார் நான் கீபோர்டு வாசிப்பேன், அதிகபட்சம் எங்கள் பள்ளிக்கும் அவர் பள்ளிக்கும் தான் அதிகமான போட்டி இருக்கும். என்ன பாட்டு பண்றீங்க, பர்த்துவிடலாம் என்றெல்லாம் சொல்லுவார். அதன்பிறகு காளை படத்தில் இணைந்து பணியாற்றினோம். அதன்பிறகு இனி வரும் காலங்களில் வெற்றிமாறன் படம் நடந்தால் அதில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது, சிம்பு வெற்றிமாறன் படம் நடந்தால் சந்தோஷம். ஆனால் ஒரு படம் ஷூட்டிங் போற வரைக்கும் எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.