ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான டியர் ("Dear") படத்தின் விமர்சனம்
கதைக்களம் :
டிவி சேனலில் வேலை பார்த்து வரும் அர்ஜுனுக்கும் (ஜி.வி. பிரகாஷ்), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தீபிகாவுக்கும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) திருமணம் நடைபெறுகிறது. சின்ன சத்தம் கேட்டாலும் தூக்கத்தில் இருந்து எழுந்து விடும் பழக்கம் கொண்டவரான அர்ஜுனும், தூக்கத்தில் முரட்டுத்தனமாக குறட்டை விடும் பழக்கம் உடையவரான தீபிகாவும் திருமணம் செய்து கொள்ள, இதன் விளைவாக இவர்களது வாழ்வில் என்னென்ன நிகழ்வுகள் நடைபெறுகிறது என்பதே இப்படத்தின் கதை
நடிகர்களின் நடிப்பு :
ஜி.வி. பிரகாஷின் யதார்த்த நடிப்பு பல இடங்களில் சிறப்பாக அமைந்திருந்தாலும், ஒரு சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என தோன்ற வைக்கிறது. தன்னுடைய பிரச்சினையை ஆரம்பத்தில் இருந்தே குறைபாடாக கருதாமல் இருக்கும் நாயகி ஐஸ்வர்யாவின் ரோலும் பலமாகவும் ஹீரோவிற்கு நிகராகவும் அமைத்திருக்கிறது. மேலும் காளிவெங்கட் - நந்தினி ஆகியோரின் கதாபாத்திரங்களும் ரசிக்க வைக்கிறது. தலைவாசல் விஜய், ரோகிணி, இளவரசு உள்ளிட்டோரும் தங்களது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்
இயக்கம் மற்றும் இசை
கணவன், மனைவிக்கு இடையேயான குறட்டை பிரச்சினையை மையமாக வைத்து குடும்பங்களுக்கான ஒரு உணர்வுபூர்வமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன். ரிபெல், கள்வன் படங்களை தொடர்ந்து இப்படத்திற்கும் தானே இசையமைத்து இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். பின்னணி இசை படத்திற்கு பலம், பாடல்கள் சுமார் ரகம்.
படத்தின் பிளஸ் :
குறட்டை பிரச்சனையை கையாண்ட விதம்
நடிகர்களின் நடிப்பு
பின்னணி இசை
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு
படத்தின் மைனஸ் :
இரண்டாம் பாதியில் வரும் தேவையற்ற காட்சிகள்
'குட் நைட்' படத்தை நினைவூட்டும் காட்சிகள்
படத்தின் நீளம்
பாடல்கள்
மொத்தத்தில் கணவன், மனைவி பிரச்சனையை மையமாக வைத்து வந்திருக்கும் ஒரு சுமாரான பீல் குட் படம் தான் "DEAR"
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“