நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் ரெபல் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
கதைக்களம் :
மூணாறு தேயிலை தோட்டத்தில் தமிழ் தொழிலார்களின் பிள்ளைகள் பாலக்காடு நகரில் உள்ள ஒரு கல்லூரிக்கு படிக்க செல்கிறார்கள். அங்குள்ள மலையாள மாணவர்கள் தமிழ் மாணவர்கள் ராக்கிங் செய்யப்பட்டு அவமானப்படுத்தபடுகிறார்கள். இந்த பிரச்சனையில் ஒரு தமிழ் மாணவர் கொல்லப்பட, கோவப்படும் நாயகன் கதிர் (G.V.பிரகாஷ் ) பிரச்சனை செய்யும் மாணவர்களை அடித்து நொறுக்குகிறார்.
இந்த பிரச்சனைக்கு பின்னால் இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் இருப்பது கதிருக்கு தெரியவர தமிழ் மாணவர்களை திரட்டி மாணவர் தேர்தலில் போட்டி போடுகிறார். தேர்தலில் நிற்கும் கதிருக்கு இரண்டு பெரிய கட்சிகளும் தொல்லை கொடுக்க, இதை கதிர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் மீதிக் கதை.
நடிகர்கள் நடிப்பு
கல்லூரி மாணவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஜி.வி பிரகாஷ் குமார். ஒரு பக்கம் காதல், ஒரு பக்கம் மோதல் என இரண்டு பரிமாணங்களிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியான மமிதாவிற்கு காதலிப்பதை தவிர நடிக்க பெரிய வேலை இல்லை எனினும் புது முகமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். 96 படத்திற்கு பிறகு ஆதித்யா பாஸ்கருக்கு வெயிட்டான கதாபாத்திரம் அதில் கலக்கி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை தேவையான அளவு கொடுத்திருக்கிறார்கள்.
இயக்கம் மற்றும் இசை
ரெபெல் என்று புரட்சிகரமாக பெயர் வைத்திருக்கும் இயக்குனர் நிகேஷ் அந்த புரட்சியை திரைக்கதையில் காட்ட சற்று தவறிவிட்டாரோ என எண்ண தோன்றுகின்றது. அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அற்புதமாக உள்ளது. தன்னுடைய படம் என்பதாலோ என்னவோ இசை மற்றும் பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தி மிரட்டி இருக்கிறார் ஜிவி.
படத்தின் ப்ளஸ் :
நடிகர்களின் தேர்வு மற்றும் எதார்த்தமான நடிப்பு
வியக்க வைக்கும் அற்புதமான ஒளிப்பதிவு
பாடல்கள் மற்றும் பின்னணி இசை
விறுவிறுப்பான முதல் பாதி
படத்தின் மைனஸ் :
சொதப்பலனா இரண்டாம் பாதி
ஈர்க்கப்படாத காட்சிகள்
சுவாரஸ்யம் இல்லாத கதைகளம்
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“