2025-ஆம் ஆண்டு முதல் 6 மாதங்கள் முடிந்துவிட்டது. ஆனாலும் இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். நட்சத்திர அந்தஸ்து, பிரம்மாண்டமான பாடல் காட்சிகள் என பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக சாதிக்கும் என்ற பொதுவான நம்பிக்கை தகர்ந்து, சிறந்த கதையம்சம் உள்ள படங்கள் வெற்றி பெறும் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் என்று சொல்லக்கூடிய படங்கள வெளியாகியுளளது. அந்த வகையில், 2025-ல் ஜூன் 27 வரை 122 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் 6 படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது.
மத கஜ ராஜா
விஷால் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு தயாரான இந்த படம் 13 வருட இடைவெளிக்கு பிறகு, 2025-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியானது. காமெடி படங்களுக்கு பஞ்சம் இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், இந்த படம் சந்தானத்தில் காமெடிக்காட்சிகளுக்காகவே ஓடியது. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அவரின் குருநாதரும் மணிவண்ணன், மற்றும் மனோபாலா ஆகியோர் நடிப்பில் திரையில் வெளியான கடைசி படமாக அமைந்தது.
டிராகன்
ஓ மை கடவுளே படத்தின் மூலம் அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'டிராகன்'. பிரதீப் ரங்கநாதன் 'டி. ராகவன்' என்ற தங்கப் பதக்கம் வென்ற பள்ளி மாணவனாகவும், கல்லூரியில் கலகக்கார மாணவனாக நடித்து, ரசிகர்களை கவர்ந்த காதல் கலந்த நகைச்சுவைப் திரைப்படமாக வெளியான இந்த படத்தில் அனுபாமா பரமேஸ்வரன் கதாநாயகியாகவும், மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கேரக்டாகளிலும் நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து.
குட்பேட் அக்லி
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. படத்தில் கதை இல்லை. பில்டப் காட்சிகள் அதிகம் என்று விமர்னங்கள் வந்தாலும், அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரிய வரவெற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிதான் ஆதிக் – அஜித் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது, இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருந்த நிலையில், பிரசன்னா, அர்ஜூன் தாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
டூரிஸ்ட் ஃபேமிலி
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், ஒரு தமிழ் குடும்பத்தின் விடுமுறை கால சாகசங்களை நகைச்சுவையுடன் விவரிக்கும் ஒரு மனதை தொடும் குடும்பத் திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. சசிகுமார் மற்றும் சிம்ரன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில், யோகி பாபு மற்றும் முனிஷ்காந்த் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். வாய்மொழி விளம்பரம் மற்றும் குடும்ப பார்வையாளர்களை ஈர்த்ததன் மூலம் இப்படம் பெரும் வெற்றி பெற்றது.
குடும்பஸ்தன்
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், கே. மணிகண்டன் நடிப்பில் வெளியான படம் குடும்பஸ்தன். கதாபாத்திரத்தில் நடித்த ஒரு உணர்வுபூர்வமான குடும்ப திரைப்படமாக வெளியானக இந்த படத்தில், சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். தனிப்பட்ட கனவுகளையும் குடும்ப கடமைகளையும் சமநிலைப்படுத்த ஒரு மனிதன் படும் போராட்டத்தை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது.
மாமன்
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், தாய் மாமனுக்கும் மருமகனுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை ஆராயும் ஒரு உணர்வுபூர்வமான கிராமிய படம் தான் 'மாமன்'. சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்தில், மூத்த நடிகர் ராஜ்கிரண், பாலா சரவணன், சுவாசிகா மற்றும் பாபா பாஸ்கர் ஆகியோர் துணை கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இந்த 6 படங்கள் தான் 2025-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளது. 122 படங்கள் வெளியானாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தக் லைப், விடா முயற்சி, குபேரா உள்ளிட்ட பல படங்கள் தோல்வியையும் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.