Advertisment

பயந்த பி.டி. வாத்தியார் அநியாயத்தை தட்டி கேட்டாரா? பி.டி. சார் விமர்சனம்

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள பி.டி.சார் படம் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Hip Hop Athi

ஹிப் ஹாப் ஆதி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஹிப் ஹாப் தமிழா "ஆதி" நடிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள பி.டி சார் படத்தின் திரைவிமர்சனம்

Advertisment

கதைக்களம் :

வில்லன் தியாகராஜன் நடத்தும் பள்ளியில் பி.டி வாத்தியாராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் ஹிப் ஹாப் ஆதி. நாம "எந்த வம்பு தும்புக்கும் போறதில்ல" என்று பூப்பாதையிலேயே பயணிக்கிறார் ஆதி. எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் அதிலிருந்து விலகியே இருக்க வேண்டும் என தன் அம்மா சொன்னதை தவறாமல் கடைபிடித்து வருகிறார். ஆனால் ஆதி தனது தங்கையாக நினைக்கும் அனிகாவிற்கு கல்லூரி நிர்வாகத்தால் பிரச்னை ஏற்பட, அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பிறகு அந்த தற்கொலைக்கான காரணத்தை ஆதி கண்டுபிடித்தாரா ? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனரா ? என்பதே மீதி கதை

நடிகர்களின் நடிப்பு :

ஆதி வழக்கம் போல தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், நடிப்பை பொறுத்தவரையில் இன்னும் பயிற்சி வேண்டும் என்றே தோன்றுகிறது. நாயகி காஷ்மீராவிற்கு படத்தில் பெரிய வேலை இல்லை. தியாகராஜன் சைலன்ட் கில்லராக வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். அனிகா சுரேந்திரனின் நடிப்பு படத்திற்கு பெரிய பிளஸ். கதையே இவரை சுற்றித்தான் நடக்கிறது, அதை உணர்ந்துகொண்டு நடிப்பில் பிரமிக்க வைக்கிறார் அனிகா. இளவரசு மற்றும் தேவதர்ஷினியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. மேலும் பாக்யராஜ், பிரபு, முனீஷ்காந்த் என எல்லோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

இயக்கம் மற்றும் இசை :

தனது முதல் படமான "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு" படத்தில் பேசியது போலவே இப்படத்திலும் சமுதாய அக்கறையோடு குறிப்பாக சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளையும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சனைகளையும் அதிலிருந்து பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆழமாக பேசியுள்ளார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன். இன்றைய காலகட்டத்திற்கு தேவையான விஷயத்தை சூப்பராக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பெரிய பாராட்டுக்கள்.ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசை தரமாக இருந்தாலும், பாடல்கள் சுத்தமாக எடுபடவில்லை

படம் பற்றிய அலசல் :

காமெடி, காதல் என ஜாலி மோடில் பயணிக்கும் முதல் பாதி, இடைவேளைக்கு பிறகு  கதைக்குள் ஆழமாக நுழைகிறது.  கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை தோலுரித்து காட்டுகிறார்கள்.அன்றாட வாழ்வில் எல்லா பெண்களும் சந்திக்கும் ஒரு பிரச்சனையை தெளிவாக விலகியிருக்கும் விதம் சிறப்பு. பெண்களின் ஆடை மீது இந்த சமுதாயத்தில் இருக்கும் பார்வையை மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். கதைக்களம் சுவாரசியமாக அமைந்திருந்தாலும் காட்சிகள் சூப்பராக அமையவில்லை.

படத்தின் பிளஸ் :

ஆதி மற்றும் அனிகாவின் நடிப்பு

இளவரசு மற்றும் தேவதர்ஷினியின் நடிப்பு

கலகலப்பான முதல் பாதி

பின்னணி இசை

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை காட்சிப்படுத்தியிருக்கும் விதம்

வசனங்கள்

கிளைமாக்ஸ் ட்விஸ்ட்

படத்தின் மைனஸ் :

ஒரு சில இடங்களில் எமோஷனல் காட்சிகள் ஒட்டவில்லை

சுவாரஸ்யமில்லாத கோர்ட் ரூம் காட்சிகள்

பாடல்கள்

சில காட்சிகளில் உள்ள தொய்வு

மொத்தத்தில் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்ட ஒரு Above Average பொழுதுபோக்கு திரைப்படமாக முடிகிறது இந்த "பி.டி.சார்".

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment