2025-ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நட்சத்திர அந்தஸ்து, பிரம்மாண்டமான பாடல் காட்சிகள் என பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக சாதிக்கும் என்ற பொதுவான நம்பிக்கை தகர்ந்து, இந்த ஆண்டு, குறைந்த செலவில், நிறைந்த தரத்துடன் எடுக்கப்பட்ட சில படங்கள், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று, தமிழ்ச் சினிமாவின் புதிய திசையை சுட்டிக்காட்டின.
இதன் மூலம் பிரம்மாண்டம் இல்லை கதைதான் முக்கியம் என்பதை இந்த படங்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. மக்களின் அன்றாட வாழ்வுடன் ஒன்றிப் போகும் கதைகள், யதார்த்தமான கேரக்டர்கள், நட்சத்திரப் பட்டாளமின்றி சிறந்த நடிப்பு என இந்த படங்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன. அந்த வகையில், 2025-ல் பாக்ஸ் ஆபிஸில் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 4 சிறு பட்ஜெட் படங்களைப் பார்ப்போம்:
டிராகன் (Dragon)
ஓ மை கடவுளே படத்தின் மூலம் அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'டிராகன்'. பிரதீப் ரங்கநாதன் 'டி. ராகவன்' என்ற தங்கப் பதக்கம் வென்ற பள்ளி மாணவனாகவும், கல்லூரியில் கலகக்கார மாணவனாக நடித்து, ரசிகர்களை கவர்ந்த காதல் கலந்த நகைச்சுவைப் திரைப்படமாக வெளியான இந்த படத்தில் அனுபாமா பரமேஸ்வரன் கதாநாயகியாகவும், மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கேரக்டாகளிலும் நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து. ரூ37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ152 கோடி வசூலித்து சாதனை படைத்தது,
டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family)
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், ஒரு தமிழ் குடும்பத்தின் விடுமுறை கால சாகசங்களை நகைச்சுவையுடன் விவரிக்கும் ஒரு மனதை தொடும் குடும்பத் திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. சசிகுமார் மற்றும் சிம்ரன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில், யோகி பாபு மற்றும் முனிஷ்காந்த் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜெயந்த் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்துள்ளார். வாய்மொழி விளம்பரம் மற்றும் குடும்ப பார்வையாளர்களை ஈர்த்ததன் மூலம் இப்படம் பெரும் வெற்றி பெற்றது. ரூ8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ87 கோடி வசூலித்து தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
குடும்பஸ்தன் (Kudumbasthan)
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், கே. மணிகண்டன் நடிப்பில் வெளியான படம் குடும்பஸ்தன். கதாபாத்திரத்தில் நடித்த ஒரு உணர்வுபூர்வமான குடும்ப திரைப்படமாக வெளியானக இந்த படத்தில், சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். தனிப்பட்ட கனவுகளையும் குடும்ப கடமைகளையும் சமநிலைப்படுத்த ஒரு மனிதன் படும் போராட்டத்தை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. ரூ8 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ரூ28 கோடி வசூலித்தது.
மாமன் (Maaman)
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், தாய் மாமனுக்கும் மருமகனுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை ஆராயும் ஒரு உணர்வுபூர்வமான கிராமிய படம் தான் 'மாமன்'. சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்தில், மூத்த நடிகர் ராஜ்கிரண், பாலா சரவணன், சுவாசிகா மற்றும் பாபா பாஸ்கர் ஆகியோர் துணை கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் அசல் தன்மையும், உணர்வுபூர்வமான மையமும் விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்தது. ரூ10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ40 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நான்கு படங்களின் வெற்றியும், தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. இனிவரும் காலங்களில், கதைக்கும், நடிப்புக்கும், உள்ளடக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள் அதிக கவனம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.