சிம்பு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பத்து தல படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு சிம்பு நடித்து வரும் படம் பத்து தல. கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக்காக தயாராகி வரும் இந்த படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், ரெட்டின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ஏ,ஆர்.ரஹ்மான இசையமைத்து வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய ஓபேலி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார். சிம்பு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பத்து தல படம் வரும் மார்ச் 30-ந் தேதி வெளியாக உள்ளது.
இதனிடையே தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவ்வப்போது பத்து தல படம் குறித்து முக்கிய அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், “03.03.23 அன்று பத்து தல படத்தில் இருந்து ஒரு பெரிய ஆச்சரியம். கவுண்ட்டவுன் தொடங்கட்டும்” என்று ஸ்டுடியோ கிரீன் ட்வீட் செய்துள்ளது.
படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரியா பவானி ஷங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் இடம்பெறும் படத்தின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும், ப்ரோமோக்களில் சிம்பு தொடர்பான காட்சிகள் இடம்பெற வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதால், இரண்டாவது சிங்கிளில் சிம்பு பங்கேற்கவில்லை.
A Huge SURPRISE coming your way from #PathuThala on 03.03.23 🔥
— Studio Green (@StudioGreen2) February 28, 2023
Let the countdown begin 💥#Atman #SilambarasanTR #AGR#PathuThalaFromMarch30
Worldwide #StudioGreen Release💥@StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman pic.twitter.com/isBQs56v5D
இது தொடர்பான சமீபத்தில், படத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அனைவருக்கும், ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம், எங்கள் முடிவின்படி சிம்பு எங்கள் ப்ரமோ வீடியோவில் கொண்டு வரக்கூடாது, எனவே அவர் படப்பிடிப்புக்கு ஒத்துழைக்கவில்லை என்று வதந்திகளை பரப்ப வேண்டாம். அவரது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம். காரணம், எங்கள் தயாரிப்பாளருக்கு பத்துதலாவின் விளம்பரம் பற்றி தெளிவான யோசனை உள்ளது. இது தொடர்பான வதந்திகளை நாங்கள் வெறுக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/