தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், அக்டோபர் 20-ந் தேதி வரை ஆந்திராவில் லியோ படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023-ம் ஆண்டு இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று லியோ. முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக லியோ குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம், லியோ படத்தை அக்டோபர் 20-ந் தேதி வரை திரையிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ்' நாக வம்சி படத்தின் தலைப்பை 'லியோ' பயன்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தெலுங்கில் 'லியோ' என்ற தலைப்பு பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பாளர் நாக வம்சி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ஹைதராபாத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றம் இன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
அதன்படி அக்டோபர் 20ம் தேதி வரை தெலுங்கு ரிலீஸை நிறுத்தி வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளிக்க சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நாக வம்சி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“