1979-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் ஆறிலிருந்து அறுபது வரை. ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்றாக இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், ஒரு பாடலை பாட மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அந்த பாடலை எப்படி பதிவு செய்தோம் என்பது குறித்தும் இளையராஜா கூறியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.
இந்த பாடல் எஸ்.பி.பி.க்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் ஹிட் பாடல்களை பாடியிருந்தார். இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை கொடுத்துள்ளார். குறிப்பாக இளையராஜா இசையில் இவர் பாடிய அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையிலான ஒரு பாடல் தான் ‘’கண்மணியே காதல் என்பது’’ என்ற பாடல்.
1979-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் ஆறிலிருந்து அறுபது வரை. ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்றாக இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் அனைத்தையும் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். அனைத்து பாடல்களுமே ரநசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் ஒரு பாடல் தான் ‘’கண்மணியே காதல் என்பது’’ என்ற பாடல்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எஸ்.ஜானகி இணைந்து பாடிய இந்த பாடலை பதிவு செய்யும்போது ஒரே மூச்சியில் பாட வேண்டும் என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் கூறியுள்ளார் இளையராஜா. ஆனால் அப்படி பாடுவது அவருக்கு கஷ்டமாக இருந்துள்ளது. அப்போது 3 ட்ராக் பதிவு இருந்ததால், ஒரு ட்ராக்கில் அவரை பாட வைத்து பதிவு செய்துவிட்டு, அவரால் பாட முடியாத இடத்தில் விட்டுவிடுமாறு கூறியுள்ளார்.
அதன்பிறகு மற்றொரு ட்ராக் புதிதாக உருவாக்கி, விடுபட்ட வரிகளை அதில் பாட வைத்து அதன்பிறகு 35எம்.எம்.பிலிமில் அதை சேர்த்து பாடலைக உருவாக்கியதாக இசையமைப்பாளர் இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“