இசையில் திரைக் கதை அமைக்க முடியுமா? விஜயகாந்த் படப் பாடலில் இளையராஜா மேஜிக்

விஜயகாந்த் வித்தியாசமாக நடித்திருந்த படத்தில், பாடலில் திரைக்கதை அமைத்திருப்பார் இளையராஜா.

விஜயகாந்த் வித்தியாசமாக நடித்திருந்த படத்தில், பாடலில் திரைக்கதை அமைத்திருப்பார் இளையராஜா.

author-image
WebDesk
New Update
Ilayaraja-Vaali

இளையராஜா - வாலி

தமிழ் சினிமாவில் இசையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இசைஞானி இளையராஜா ஒரு திரைப்பட இயக்குனருக்கு நிகராக பாடலில் திரைக்கதை அமைத்திருந்தார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

கடந்த 1984-ம் ஆண்டு, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான படம் வைதேகி காத்திருந்தாள். விஜயகாந்த், ரேவதி, ராதாரவி, கவுண்டமணி செந்தில் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்க, கவிஞர் வாலி, பஞ்சு அருணாச்சலம், கங்கை அமரன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.

பாடல்களுக்காகவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் விஜயகாந்த் திரை வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதேபோல் அப்போது ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த விஜயகாந்த், இந்த படத்தின் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் படத்தின் பெரும்பாலான காட்சிகளில், தாடியுடன் நடித்திருப்பார்.

படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘’காத்திருந்து காத்திருந்து’’ என்று தொடங்கும் பாடலில் ஒரு படத்திற்கான திரைக்கதையை அமைத்ததுபோல் பாடல் வரிகளை வாலி எழுத, அதற்கு அழகாக இசையமைத்திருப்பார் இசையமைப்பாளர் இளையராஜா.

Advertisment
Advertisements

தனது காதலியான வைதேசியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் வெள்ளைச்சாமி (விஜயகாந்த்) அவரிடம் விளையாட்டுத்தனமாக ஒரு செயலை செய்யப்போக, அது தெரியாமல் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வார். இதனால் அவரது நினைவாகவே தாடி வளர்த்துக்கொண்டு இரவில் பாடல் பாடும் ஒரு காதலனாக மாறிவிடுவார் வெள்ளைச்சாமி. அப்போது வரும் பாடல் தான் காத்திருந்து காத்திருந்து’’.

காதலி இறந்துவிட்டால, அவள் இனி வரமாட்டாள் என்று தெரிந்தும் அவளிடம் பேசுவது போல பாடல் வரிகளை அமைத்து ஒருபுறம் வாலி அசத்த, இதற்கு சிவரஞ்சனி ராகத்தை வைத்து சிறப்பாக இசையமைத்து பாடலுக்கு மெருகூட்டியிருப்பார் இளையராஜா. பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய இந்த பாடல் காதலர்களின் முக்கிய பாடலாக இன்றும் கேட்கக்கூடிய ப்ளே லிஸ்டில் இடம்பெற்றுள்ளது என்று சொல்லலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: