பிரிவுக்கு பின் இளையராஜா இசையில் வைரமுத்து: ரிலீஸ் ஆன ஒரே வருடத்தில் ரீமேக் செய்யப்பட்ட பாடல்!
ஒரு படம் வெளியாகி பல வருடங்கள் கழித்து ரீமேக் செய்யும் வழக்கம் தற்போது இருந்தாலும், 80-களில் வெளியான ஒரு பாடல் ஒரே வருடத்தில் மற்றொரு படத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே இணைந்து பணியாற்றி இருந்தாலும், இளையராஜா வைரமுத்து கூட்டணியில் வநத பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று காலம் கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது. ஆனால் இவர்கள் இருவரும் பிரிந்தபிறகு இளையராஜா மெட்டுக்கு வைரமுத்து பாடல் எழுதியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
தமிழ் சினிமாவில் இயக்கம் மற்றும் நடிப்பில் முத்திரை பதித்தவர் விசு. இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்த இவர், பல படங்களில் கதை, திரைக்கதை வசனம் எழுதிய நிலையில், 1982-ம் ஆண்டு வெளியான கண்மணி பூங்கா என்ற படத்தன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் சம்சாரம் அது மின்சாரம்.
1986-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஏ.வி.எம்.நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், விசு, பாண்டியன், ரகுவரன், லட்சுமி மனேராமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சங்கர் – கணேஷ் இசையமைக்க, வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த படத்தில் வாழ்க்கையில் விரக்தியான ஒரு கேரக்டர் முதன் முதலில் மது குடித்துவிட்டு பாடுவது போன்ற ஒரு பாடல் வேண்டும் என்று கேட்க, அதற்கு சங்கர் கணேஷ் டியூன் போட்டுள்ளனர். ஆனால் எந்த டியூனும் விசுவுக்கு திருப்தியாக இல்லை.
Advertisment
Advertisement
ஒரு கட்டத்தில், இந்த பாடல் மாதிரி போடுங்கள் என்று சொல்லி விசு ஒரு பாடலை சொல்ல, இது மாதிரி என்ன அந்த டியூனையே போட்டுக்கொள்வோம் என்று கூறியுள்ளனர். விசு சொன்ன பாடல், படிக்காதவன் படத்தில் வரும் ஊரை தெரிஞ்சிக்கிட்டேன் என்ற பாடல். முழுக்க முழுக்க சோக பாடலாக இருக்கும் இந்த மெட்டை சற்று காமெடியான பாடலாக மாற்ற இளையராஜா ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.
படத்தை தயரித்த ஏ.வி.எம்.சரவணன், இளையராஜாவிடம பேசி சம்மதம் வாங்க, அந்த மெட்டை அப்படியே பயன்படுத்தியுள்ளனர். 1985-ம் ஆண்டு வெளியான படிக்காதவன் படத்திலும், இந்த பாடலை வைரமுத்து தான் எழுதியிருப்பார். அந்த வரிகளை அப்படியே பயன்படுத்தி, இடையில் உள்ள வரிகளை மாற்றியமைத்து இந்த பாடலை எழுதியிருப்பார். இளையராஜா வைரமுத்து பிரிவுக்கு பின் இளையராஜா மெட்டுக்கு வைரமுத்து எழுதிய பாடல் இதுதான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“