இந்தியன் 2 முக்கிய அப்டேட்... நீருக்கு அடியில் ஜவான் ஷூட்டிங்... டாப் 5 சினிமா

பல படங்களை இயக்கி வெற்றி கண்ட பாண்டியராஜன் மற்ற இயக்குனர்களில் படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார்.

பல படங்களை இயக்கி வெற்றி கண்ட பாண்டியராஜன் மற்ற இயக்குனர்களில் படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
indian 2 jawan

இந்தியன் 2 - ஜவான்

இந்தியன் 2 முக்கிய அப்டேட்

தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் படம் இந்தியன் 2. பல தடைகளை தாண்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக இந்தியன் 2 படக்குழு தென்ஆப்பிரிக்கா மற்றும் தைவான் நாடுகளுக்கு செல்ல உள்ளதாகவும், ஜூன் மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ஹீரோவான ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன்

publive-image
ஐஸ்வர்யா ராஜேஷ் மணிகண்டன்

சன் டிவியி சீரியலில் நடித்து வந்த நடிகரு மணிகண்ட ராஜேஷ் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனான இவர், தற்போது வெப் சிரீஸ் ஒன்றில் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மை டியர் டயானா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சிரீசுக்கான பூஜை என்று நடைபெற்றது.

முதல் நாளே வெற்றியை கொண்டாடிய நானி – கீர்த்தி சுரேஷ்

naani Keerthi Suresh
தசரா வெற்றி கொண்டாட்டம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் நேற்று வெளியான படம் தசரா. நானியுடன் கீர்த்தி சுரேஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான தசரா படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளே படத்தின் வெற்றிக்கொண்டாடம் என்று நானியும் கீர்த்தி சுரேஷூம் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

நீருக்கு அடியில் ஜவான் ஷூட்டிங்

Advertisment
Advertisements

தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வரும் படம் ஜவான். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நீருக்கு அடியில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ பதிவு ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

பாண்டியராஜன் குடும்பத்துடன் ஸ்பெஷல் டே

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர், இசையமைப்பாளர் என பன்முறை திறமை கொண்டவர்களில் ஒருவர் பாண்டியராஜன். தொடர்ந்து பல படங்களை இயக்கி வெற்றி கண்ட இவர் மற்ற இயக்குனர்களில் படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இவர் இயக்கிய ஆண்பாவம் படம் இன்றும் பல்வேறு ரசிகர்களால் ரசிக்கப்படும் படமாக உள்ளது. இந்நிலையில், பாண்டியராஜன் தற்போது தனது 37-வது திருமண நாளை தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்கோது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: