Advertisment

இந்தியன் தாத்தா கம்பேக் : இந்தியன் 2 ஆடியோ ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியன் 2 படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ள நிலையில், படம் இசை வெளியீட்டு விழா குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Indian 2 Kamal

இந்தியன் 2 போஸ்டர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படம் ஜூலை மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1-ந் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,

Advertisment

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல் 2 வேடங்களில் நடித்த இந்த படத்தில் சுகன்யாமனிஷா கொய்ராலாசெந்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லஞ்சம் ஊழல் உள்ளிட்ட சமூக விரோதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

தொடர்ந்து 27 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை ஷங்கர் இயக்கி வரும் நிலையில்காஜல் அகர்வால்பிரியா பவானி சங்கர்சித்தார்த்எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்படம் ஜூலை மாதம் 17-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் முதல் பாடலானா பாரா என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இந்தியன் 2 குறித்து மேலும் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1-ந் தேதி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெரிய கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள். இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும். மறக்க முடியாகத மாலை வேளைக்கு தயாராகுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Indian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment