/tamil-ie/media/media_files/uploads/2019/08/Indian-2-movie-story-leaked.jpg)
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல் 2 வேடங்களில் நடித்த இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா,செந்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லஞ்சம் ஊழல் உள்ளிட்ட சமூக விரோதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
தொடர்ந்து 27 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை ஷங்கர் இயக்கி வரும் நிலையில்,காஜல் அகர்வால்,பிரியா பவானி சங்கர்,சித்தார்த்,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,படம் ஜூலை மாதம் 17-ந் தேதி வெளியாகுமு் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியன் 2 படம் குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் நாளை (மே 22) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடலுக்கான ப்ரமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Get ready for a Promo of the 1st single "PAARAA" 🔪 from INDIAN-2 🇮🇳 releasing today at 5️⃣ PM! Full Song dropping tomorrow at 5️⃣ PM!
— Lyca Productions (@LycaProductions) May 21, 2024
Rockstar @anirudhofficial musical 🎹
Lyrics @poetpaavijay ✍🏻#Indian2 🇮🇳 #Ulaganayagan@ikamalhaasan@shankarshanmugh@anirudhofficial… pic.twitter.com/Zly7HUV8qG
பாடலுக்கு பாரா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.