Advertisment
Presenting Partner
Desktop GIF

தாத்தா அசத்தினாரா? அசந்துவிட்டாரா? இந்தியன் 2 படம் எப்படி?

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்களை கவர்ந்ததா?

author-image
WebDesk
New Update
Indian 2 Kamla

இந்தியன் 2

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பல போராட்டங்களுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ள  "இந்தியன் 2" திரைப்படத்தின் விமர்சனம்

Advertisment

கதைக்களம் :

இன்றைய சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை சித்தார்த் தனது நண்பர்களான பிரியா பவானி ஷங்கர், ஜெகன் ஆகியோருடன் இணைந்து யூடியூப் சேனல் மூலம் நகைச்சுவையாக மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னால் இந்த சமுதாயத்தை திருத்த முடியாது இதற்கு இந்தியன் தாத்தா தான் வர வேண்டும் என்று முடிவு செய்து அவரை தேடும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதற்காக #ComeBackIndian என்ற ஹாஷ்டேக்கை வைரலாக்கி இந்தியாவில் நடக்கும் கொடுமைகளை இந்தியனுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.

இவர்களின் தொடர் முயற்சி காரணமாக தைவானில் இருக்கும் சேனாபதி மீண்டும் இந்தியா வர முடிவெடுக்கிறார். 28 வருடங்களுக்கு முன்பு இந்தியன் செய்த கொலைகளுக்காக அவரை கைது செய்ய காவல்துறை ஒரு புறம் தேட, மறுபுறம் லஞ்சம் ஊழல் செய்பவர்களை கொலை செய்ய திட்டமிடுகிறார் இந்தியன் தாத்தா. இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதி கதை

நடிகர்களின் நடிப்பு:

கலைக்காக நடிப்பின் எந்த எல்லைக்கும் செல்லும் உலகநாயகனின் நடிப்பை புகழாமல் இருக்க முடியாது. இந்தியன் முதல் பாகத்தில் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கமல் இப்படத்தில் பல கெட்டப்புகளில் வந்து நம்மை பிரமிக்க வைக்கிறார். ஸ்டண்ட் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் ஒவ்வொரு வர்மக்கலையையும் பயன்படுத்தும்போது அதன் பாதிப்பையும், தாக்கத்தையும் கூறுவது ரசிக்க வைக்கிறது.

சித்தார்த்தின் ரோல் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. இந்தியனை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவதர்கான முயற்சிகளில் அவரின் நடிப்பு சூப்பர். மறைந்த கலைஞர்களான விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா ஆகியோரை மீண்டும் திரையில் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், ஜெகன், பாபி சிம்ஹா, சமுத்திரகனி ஆகியோரும் நடிப்பில் குறைவைக்கவில்லை. எஸ்.ஜே.சூர்யாவிற்கு இப்படத்தில் சிறிய ரோல் என்றாலும் மிரட்டியுள்ளார்.

இயக்கம் மற்றும் இசை:

ஷங்கரின் படம் என்றாலே பிரம்மாண்டத்துடன் சேர்த்து சமூக கருத்தையும் சாதாரண மக்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக கொடுப்பார். முதலில் "உங்கள் வீட்டை சுத்தப்படுத்தினால் நாடு தானாகவே சுத்தமாகும்" என்பதை மையகருத்தாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். காட்சிக்கு காட்சி பிரமாண்டம், VARIETY LOCATIONS, ஆடல், பாடல், கருத்து, காமெடி என எல்லா விதத்திலும் மக்களை கவர முயற்சி செய்திருந்தாலும் திரைக்கதையில் சொதப்பியுள்ளார். எழுத்தாளர் சுஜாதாவை ஷங்கர் மிஸ் செய்கிறாரோ இல்லையோ இப்படத்தின் வசனங்களை பார்க்கும் போது நாம் நிறையவே மிஸ் செய்கிறோம்.

இந்தியன் 2 படத்தில் ரஹ்மான் இல்லை என்பதே படத்திற்கான முதல் சறுக்கலாக அமைந்தது. ஆனால் அனிருத் நிச்சயம் ஏமாற்றமாட்டார் என்ற எண்ணத்தில் இருந்த ரசிகர்களின் நம்பிக்கையை ஓரளவிற்கு காப்பாற்றியிருக்கிறார். BGMகள் ஆங்காங்கே காட்சிகளை மெருகேற்றியிருந்தாலும் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. இந்தியன் 1ல் படத்தின் சில இசைகளை இப்படத்தில் அனிருத் பயன்படுத்தியிருக்கும் இடமும், விதமும் சிறப்பு.

படத்தின் ப்ளஸ்:

கமல்ஹாசனின் நடிப்பு 
ரவிவர்மனின் ஒளிப்பதிவு 
சில இடங்களில் இடம்பெற்ற அட்டகாசமான இசை 
மிரட்டலான VFX காட்சிகளை 
கண்களை கவரும் விதவிதமான Locations 
காலண்டர் பாடலின் காட்சியமைப்பு 
கிளைமாக்ஸ் சண்டை காட்சி
முத்துராஜ் கலை இயக்கம்

படத்தின் மைனஸ்:

சுவாரசியம் குறைந்த திரைக்கதை 
சோர்வடைய வைக்கும் Outdated காட்சிகள் 
படத்தின் நீளம் 
அழுத்தமில்லாத வசனங்கள் 
கனெக்ட் ஆகாத எமோஷன்ஸ் 
சில லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில் இந்தியன் 1 ஏற்படுத்திய தாக்கத்தை இப்படம் ஏற்படுத்த சற்று தவறிருந்தாலும் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. இன்றைய கால தலைமுறைக்கு லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் ஆபத்தை உணர்ந்தியிருக்கும் விதம் சிறப்பாக இருந்தாலும் சில குறைகளை தவிர்த்திருந்தால் இந்தியன் 2வை கொண்டாடியிருக்கலாம்.

குறிப்பு: படத்தின் இறுதியில் வைக்கப்பட்டுள்ள இந்தியன் 3 படத்தின் ட்ரைய்லர் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது 

நவீன் சரவணன்

Indian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment