Advertisment

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: டாம் அன்ட் ஜெர்ரி ஆட்டம்; இந்தியன் 2 டிரெய்லர் வைரல்!

இந்தியன் 2 படம் வரும் ஜூலை 17ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian 2 Kamal

இந்தியன் 2 போஸ்டர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று (ஜுன் 25) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல் 2 வேடங்களில் நடித்த இந்த படத்தில் சுகன்யாமனிஷா கொய்ராலாசெந்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லஞ்சம் ஊழல் உள்ளிட்ட சமூக விரோதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

தொடர்ந்து 27 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை ஷங்கர் இயக்கி வரும் நிலையில்காஜல் அகர்வால்பிரியா பவானி சங்கர்சித்தார்த்எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்படம் ஜூலை மாதம் 12-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையாக விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேபோல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்களையும் தற்போது 2-ம் பாகத்தின் பாடல்களையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகினறனர். ஆனாலும் படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வரும் நிலையில், இந்தியன் 2 படத்தின் டிரெய்லவர் நேற்று (ஜூன் 24)வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூன் 25) இரவு 7 மணிக்கு இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், படம் குறித்து இதுவரை வெளியான அப்டேட்கள் கவனத்தில் இல்லாத நிலையில், டிரெய்லராவது ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Kamalhaasan Indian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment