Advertisment

இந்தியன் முதல் படையப்பா வரை : ரீ-ரிலீஸ்க்கு தயாராகும் பெரிய படங்கள் ; கில்லி சாதனை தகர்க்கப்படுமா?

ரீ-ரிலீஸில் கில்லி திரைப்படம் பெரிய வெற்றியாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் ரீ-ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Kamal Rajani vijay Surya

இந்தியன் - வில்லு - வேல் - படையப்பா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய சினிமாவில் பரபரப்பாக இயங்கும் சினிமா வட்டாரங்களில் தமிழ் சினிமா முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஆண்டுக்கு 200 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் வெளியாகி வருகிறது அது மட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ரஜினிகாந்தின், பாபா, கமல்ஹாசனின், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

Advertisment

இந்த வகையில் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விஜயின் கில்லி திரைப்படம், இதுவரை இந்திய சினிமாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களின் வசூலை விட பல மடங்கு அதிகம் வசூல் செய்து ரீ-ரிலீஸில் பெரிய சாதனை படைத்துள்ளது. விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷித் வித்யார்த்தி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம், தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் ரீமேக் என்றாலும், ஒரிஜினலை விட கில்லி பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் லாபத்தை கொடுக்காத நிலையில, ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படமான கில்லியின் வெற்றி தியேட்டர் உரிமையாளர்களை மீண்டும் ரீ-ரிலீஸ் படங்களை திரையிடுவதில் ஆர்வம் காட்சி வருகின்றனர். அந்த வகையில், இதுவரை இருந்த சாதனைகளை முறியடிக்கும் வகையில், தமிழில் அடுத்து வரவிருக்கும் ரீ-ரிலீஸ் திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.

'படையப்பா'

ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் 'படையப்பா'. தமிழ் சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக இருக்கும் படையப்பா படத்தில் கிராமப்புர இளைஞராக ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படத்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மணிவண்ணன், செந்தில் மற்றும் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 'படையப்பா' ரஜினிகாந்தின் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். மேலும் இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தின் ரீ-ரிலீ்ஸ் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை மீண்டும் உருவாக்கும் என்று நம்பலாம்.

'இந்தியன்'

கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் 'இந்தியன்'. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். 'இந்தியன் 2' ஜூலை 12 அன்று இந்திய அளவில் வெளியிடப்பட உள்ளது, அதற்கு முன்னதாக 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தை மீண்டும் திரையரங்குகளில் மீண்டும் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 'இந்தியன் 2' படத்திற்கு முன்னதாக 'இந்தியன்' படம் வெளியானால் அது இந்தியன் 2 படத்திற்பகு பெரிய வரவேற்பாக அமையும். இன்றைய ரசிகர்களும் இந்தியன் படம் குறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கும்.

'வில்லு'

ரீ-ரிலீஸில் 'கில்லி' படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு விஜய்யின் 'வில்லு' படம் பிரமாண்டமாக ரீ-ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது, மேலும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் மாதம் இந்த படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். 'கில்லி' ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்த நிலையில், 'வில்லு' ரீ-ரிலீஸ் மூலம் விஜய் மீண்டும் ஒரு முறை பாக்ஸ் ஆபிஸை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பிரபுதேவா இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள 'வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.

'வேல்'

சூர்யா இயக்குனர் ஹரியுடன் இரண்டாவது முறையாக இணைந்த படம் 'வேல்'. கிராமபுறத்தில் இருக்கும் கோபக்கார இளைஞர், சிட்டில் இருக்கும் புத்திசாலி இளைஞன் என இரட்டை வேடங்களில் சூரியா நடித்திருந்தார். 2007 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்றாக இருக்குமு் வேல், படம் ரீ-ரிலீஸில் நிச்சயமாக ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி இழுக்கும், மேலும் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rajinikanth Thalapathy Vijay Kamalhaasan actor surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment