அரசியலில் தனித்தனியாக செயல்பட்டு வரும் அன்புமணி ராமதாஸ் – சீமான இருவரும் ஒரே மேடையில் தோன்றி பாடல் பாடிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளைராஜா. இசைஞானி, மாஸ்ரோ என்று பல பட்டங்களுடன் தற்போதுவரை பல படங்களுக்கு இசையமைத்து வரும் இளையராஜா 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தனது இசையால் பல வெற்றிப்படங்களை கொடுத்த இளையராஜா, இவர் இசையமைத்தால் போதும் படம் வெற்றிதான் என்று சொல்லும் அளவுக்கு பெயர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், திரைத்துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணியில் இருந்து வரும் இளையராஜா நேற்று (ஜூன் 2) தனது 81-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், இளையராஜா பிறந்த நாளை முன்னிட்ட நடத்தப்பட்ட விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் இளையராஜாவை வாழ்த்தி பேசிய சீமான் கூறுகையில், இளையராஜாவை வாழ்த்துகிற வாய்பை பெற்றதற்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. பிறந்த பலனை அடைந்துவிட்டது போல் நெகிழ்ச்சியாக உள்ளது. இங்குள்ள பலருக்கு அவர்களது தாய் பாடிய தாலாட்டு நினைவிருக்கிறதா என்று தெரியாது. என் அம்மா பாடிய எந்த பாட்டை கேட்டு நான் தூங்கினேன் என்பதும் தெரியாது. ஆனால் எங்களை எல்லாம் தாலாட்டி தூங்க வைத்த ஒரே பாட்டு எங்களின் ஆண் தாய் இளையராஜா பாட்டுதான்.
மேலும் கடலோரக் கவிதைகள் படத்தில் வரும் ஒரு காட்சியை விவரித்து 'அடி ஆத்தாடி...' பாடலை பாடிய சீமான் "இளையராஜா முன்பு பாடி காட்டியதற்கு வருந்துகிறேன். பின்பு அங்க போய் ஸ்ருதி இல்லாம பாடுறார்ன்னு திட்டுவாரு" வார்த்தைகளால் சொல்லி கடத்த முடியாது. அதற்காகத் தான் பாடி காட்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் சீமான் இருவரையும் ஒரே நேரத்தில் மேடைக்கு அழைத்தார். இளையராஜா. அப்போது அருகருகே இருந்து எழுந்த சீமான் அன்புமணி இருவரும் எதிர் எதிர் திரையில் நடந்நது மேடைக்கு வந்தனர். தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் ஹம்மிங்கில் சொல்லும் பாடலை என்ன பாடல் என்று சீமான கண்டுபிடித்து பாடி காண்பித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil