ஓடிடி வெளியீட்டை உறுதி செய்த ஜகமே தந்திரம் : டீசருக்கு அமோக வரவேற்பு

Jagame Thanthiram Movie OTT : தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Jagame Thanthiram Movie On Netflix : தமிழ் சினிமாவில்முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். தற்போது தமிழில் பட்டாஸ் படத்திற்கு பிறகு அவர் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். பேட்ட படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில், ஐஸ்வர்யா லெட்சுமி நாயகியாகவும், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை ரிலைன்ஸ் என்டர்டைமன்ட நிறுவனத்துடன் இணைந்து ஒய்நாட் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து கடந்த ஆண்டே வெளியாகவேண்டிய இந்த படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப்போனது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கிய அறிவிப்பை வெளிட்ட இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஜகமே தந்திரம் படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தியேட்டர்கள் தடை செய்யப்பட்டிருந்த சமயத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் தளபதி விஜய் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் சில மாதங்கள் காத்திருந்து தியேட்டரில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. படம் தியேட்டரில் வெளியாகி ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியானாலும் தியேட்டரில் கூட்டம் அலைமோதியது.

மாஸ்டர் படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் தயாரிப்பு நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் தனுஷ் ரசிகர்களும், இந்த படம் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என்று போஸ்டர் அடித்து ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகுமா? அல்லது தியேட்டரில் வெளியாகுமா என்பது குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது இந்த சதேகத்தை தீர்த்துவைக்கும் விதமாக இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட ஜகமே தந்திரம் படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த டீசரின் முடிவில் நெட்பிலிக்ஸில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷின் கோரிக்கை தயாரிப்பு தரப்பு நிராகரித்துள்ளது. இந்நிறுவனம் தயாரித்துள்ள ஏலே திரைப்படம் நேரடியாக விஜய் டிவியில் வெளியாகவுள்ளதால் ஜகமே தந்திரம் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்த்தாகவும், அதனால்தான் இந்த படம் ஒடிடி தனத்தில் வெளியாவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் ஜகமே தந்திரம் படத்தின் டீசரை பிரபலங்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema jagame thanthiram movie release on netflix

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com