Advertisment

நீலாம்பரி முன்னால படையப்பா மரியாதை போச்சே! ரம்யா கிருஷ்ணன் என்ன சொல்கிறார்?

ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 28) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jailer Audio Launch

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ரஜினிகாந்த் - ரம்யா கிருஷ்ணன்

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இதில் நட்சத்திரங்கள் பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த சிறுத்தை சிவா இயக்கிய இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பபு ஸ்டார் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, தமன்னா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாணடமாக தயாரித்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 28) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு ஆகியோர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், "யோகி பாபுவுடன் காரில் உட்கார்ந்து ஷூட் எடுத்தார்கள். எக்ஸ்பிரஷன் ஷாட். இந்த ஷாட் சரியாக வரவில்லை. அதனால் எக்ஸ்பிரஷன் கொஞ்சம் அதிகமாகிடுச்சு, இல்ல இப்போ கம்மியாயிடுச்சு. ரொம்ப அதிகமாகிடுச்சு... என்று அங்கே இருந்து மைக்கில் சொல்றாங்க. இது மாதிரியே சொல்லிக்கிட்டு இருந்தப்போ யோகி பாபு சரி சரி-னு சொல்லிட்டு நடிதார்.  

ஒரு கட்த்தில் ஷாட் ஓகே ஆகிடுச்சு. அதன்பிறகு யோகிபாபு, அப்புறம் 'சார்... இவன் சாவடிக்கிறான் சார். இவன் கேக்குரானேனு ஸ்கேல் வச்சி அளவெடுத்தா நடிக்க முடியும்  என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய நடிகை ரம்யா கிருஷ்ணன், 24 வருடங்களுக்கு பிழகு ரஜினி சாருடன் இணைந்து நடிக்கிறேன். ஒரு காட்சியில், அவருக்கு ஒரு எக்ஸ்பிரஷன் கொடுத்துட்டு பக்கத்தில் இருப்பவருக்கு ஒரு எக்ஸ்பிரஷன் கொடுக்கணும்.

இந்த காட்சி சரியாக வராமல் 8 டேக் வரை போய்டுச்சி. இந்த நீலாம்பரி முன்னால இந்த படையப்பாவோட மரியாதைய கெடுத்துட்டாங்க என்று பேசிய ரம்யகிருஷ்ணன் படத்தில் சீரியஸ் சீனில் காமெடி வரும் என்று கூறியுள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth Ramya Krishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment