ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் தமன்னா நடனமாடிய நிலையில், ரஜினிகாந்த் மாஸாக வந்து பங்கேற்றுள்ளார்.
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் படம் ஜெயிலர். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டாக தயாரித்து வருகிறது.
வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி ஜெயிலர் படம் பிரம்மாணமாக வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் ஏற்கனவே காவாலா, ஹகூம், ஜூஜூபி என 3 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் குறிப்பாக தமன்னாவின் நடனத்தில் வெளியானா காவாலா பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னணி நட்சத்திரங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக இன்று நடைபெற்றது. தமன்னா நடனத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் மாஸான என்ட்ரி கொடுத்திருந்தார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் ஷூகும் பாடலை ரசிகர்களுக்காக 2 முறை பாடி அசத்தினார். இது தொடர்பான வீடியோ பதிவுகளை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“