ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் வசூலில் மாஸ் காட்டி வரும் நிலையில், உலளவில் இதுவரை 300 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் படத்திற்காக வரவேற்பு அதிகரித்து வருவதால் வசூலில் மேலும் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், தமன்னா பாட்டியா, யோகி பாபு மற்றும் வசந்த் ரவி என முன்னணி நட்சத்திரங்கள் ஆகியோரும் நடித்துள்ள நிலையில், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களி கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.
சுதந்தர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான ஜெயிலர் படம் வசூலில் புதிய சாதனை படைத்து வரும் நிலையில், இந்திய அளவில் 3 நாட்களில் 100 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற நடிகர்கள் தங்களது படத்தின் அதிகபட்ச வசூலை எட்டுவதற்கு குறைந்தது 3-4 வாரங்கள் ஆகும். ஆனால் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் 3-4 நாட்களில் பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த்-நெல்சனின் கூட்டணியின் முதல் படமாக ஜெயிலர், வெளியான 4வது நாளில் உலகம் முழுவதும் ரூ.222 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் ரூ.300 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உலகளவில் அதிவேகமாக 300 கோடியை எட்டும் 2-வது படம் ஜெயிலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் ரஜினிகாந்தின் 2.0 படம் உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 வெளியான 4 நாட்களில் ரூ.400 கோடி வசூல் செய்து முதல் பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான ஜெயிவர் படம் முதல் நாளில் ரூ 48.35 கோடி வசூல் செய்தது. 2-வது நாளில் ரூ.25.75 கோடியும், 3-வது நாளில் ரூ.35 கோடியும் வசூலித்ததாக வர்த்தக ஒருங்கிணைப்பாளர் சாக்னில்க் தெரிவித்துள்ளார். 4வது நாளான நேற்று இப்படம் ரூ 38 கோடி வசூல் செய்ததாக இணையதளம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இப்படத்தின் மொத்த இந்திய வசூல் ரூ.127 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமாரின் கடைசிப் படமான பீஸ்ட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறிவிட்ட நிலையில், ஜெயிலர் படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவியின் போலா ஷங்கர் போன்ற பிற படங்களின் போட்டி இருந்தபோதிலும் ஜெயிலர் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil