ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலில் மீண்டும் தான் சூப்பர்ஸ்டார் என்பதை ரஜினி நிரூபித்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியானது. ரஜினிகாந்தின் முந்தைய 2 படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், ஜெயிலர் படம் முன்பதிவிலேயே சாதனை படைத்திருந்தது.
இதனிடையே சுதந்திரதினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியான ஜெயிலர் படம் 2023-ம் ஆண்டின் சிறந்த ஓப்பனிங் பெற்ற படமாக மாறியுள்ள நிலையில், முதல் நாளில் 48.35 கோடி ரூபாய் வசூலித்தள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 11)ரூ 27 கோடி வசூலித்துள்ளதாக இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம், ஜெயிலர் படம் இந்தியாவில் இதுவரை ரூ.75.35 கோடி வசூலித்துள்ள நிலையில், உலகளாவிய ரூ.96.6 கோடியை எட்டியது. தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 12) ஜெயிலர் 30 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் வெளியான 3 நாட்களில், ஜெயிலர் 100 கோடி வசூலை கடக்கும் என்று கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தை இதுவரை ஒட்டுமொத்தமாக 69.12 சதவீத தமிழ் மக்கள் பார்த்துள்ளனர். தமிழகத்தில் காலைக் காட்சிகளுக்கான 47.49 சதவீத பார்வையாளர்களை பெற்றிருந்த நிலையில், நாள் செல்லச் செல்ல, பார்வையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, மதியம் காட்சிகளுக்கு 64.28 சதவீதத்தையும், மாலைக் காட்சிகளுக்கு 76.68 சதவீதத்தையும், இரவுக் காட்சிகளுக்கு 88.02 சதவீதத்தையும் எட்டியது.
ஜெயிலரின் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி பதிப்புகள் திரையிடப்பட்ட திரையரங்குகளிலும் கணிசமான எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் காணப்பட்டனர். தெலுங்கு மாநிலங்களில் 61.01 சதவீதம் மக்கள் படம் பார்த்துள்ளனர். அதே நேரத்தில் கன்னட மார்கெட்டில் ஒட்டுமொத்தமாக 30.38 சதவீதமும், இந்தி சந்தையில், ஒட்டுமொத்தமாக 31.73 சதவீதத்தை எட்டியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“