நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இது தொடர்பான நேர்காணலில் நெல்சன் விஜய் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாராவின் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் திலீப் குமார் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் என்ற படத்தை இயக்கினார். இந்த இரு படங்களும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், தனது 3-வது படமாக விஜய் நடிப்பில் பீஸ்ஸ்ட் படத்தை இயக்கினார். ஒரு ஷாப்பிங் மாலில் புகுந்த தீவிரவாதிகள் அவர்களை பிடிக்கும் ராணுவ அதிகாரியை பற்றிய கதை.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தயில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் படம் ஒரே நாளில் நடப்பது போன்ற கதை ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது என விமர்சகர்கள் கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து நெல்சன் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பீஸ்ட் படத்தின் நெகடீவ் கமெண்ட்ஸ் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியது
ஆனாலும் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனிடையே ஜெயிலர் படம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் நெல்சன், பீஸ்ட் படத்தின் கடுமையான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளர்ர்.
‘பீஸ்ட்’ கடுமையான விமர்சனங்களை சந்தித்தபோது நடிகர் விஜய்யிடம் ‘சார் என் மேல உங்களுக்கு எதும் கோபமா?’ எனக் கேட்டேன். அதற்கு அவர், என்மேல எனக்கு என்ன கோபம் என்று கேட்டபோது படத்திற்கு நெகடீவ் கமெண்ட்ஸ் வருகிறதே என்று சொன்னேன். அதற்கு அவர் நான் எதுக்கு உன் மீது கோபமாக இருக்கப் போகிறேன்?. உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம் தானா? நீ இப்படி என்னிடம் கேட்பது கஷ்டமாக உள்ளது. இது இல்லாவிட்டால் இன்னொரு படம் எடுக்கப் போகிறோம். அவ்ளோ தான். இது வேற அது வேற.
படம் எடுத்தோம். சிலருக்கு பிடித்திருக்கிறது. சிலருக்குப் பிடிக்கவில்லை. நேர்மையான உழைப்பை செலுத்தினோம். என்னிடம் சொன்னதை படமாக எடுத்திருக்கிறாய். அவ்ளோதான். அடுத்த முறை வேறுமாதிரி படம் பண்லாம் என்று சொன்னார். அதேபோல் ஜெயிலர் வந்ததும் முதலில் அவர் தான் என்னைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்” என நெல்சன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.