ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக ஜெயிலர் திரைப்படம் கடந்த 2 வாரங்களாக மாஸ் வசூல் செய்து வந்த நிலையில், 3-வது வாரத்தில் வசூலில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் விநாயகன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டாக தயாரித்திருந்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான ஜெயிலர் படம் தொடர்ந்து 2 வாரங்களாக வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்த நிலையில், 3-வது வாரத்தில் ஜெயிலர் படத்தின் வசூல் குறைய தொடங்கியுளளது. இதில் இந்திய பாக்ஸ்ஆபீஸில் ஜெயிலர் படம் நேற்று முன்தினம் மொத்தம் ரூ 2.77 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது கடந்த வியாழன் வசூலுடன் ஒப்பிடும்போது 9 சதவீதம் குறைவாகும்.
அதே சமயம் நேற்றைய நிலவரப்படி (வெள்ளிக்கிழமை), ஜெயிலர் இந்திய பாக்ஸ்ஆபீசில் ரூ 300 கோடி வசூலை கடந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக ஜெயிலர் படம் இதுவரை 301.57 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உள்நாட்டில் ரூ.350.3 கோடியும், வெளிநாடுகளில் ரூ.183 கோடியும் சேர்த்து, ஜெயிலரின் உலகளாவிய வசூல் ரூ.533.3 கோடியை எட்டியுள்ளது.
எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த தமிழ் படமாக ஜெயிலர் உருவாகுமா?
ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ஜெயிலர் உண்மையில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 600 கோடியைத் தாண்ட முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த வசூலை முறியடித்த பிறகு, அதன் முழு ஓட்டத்தின் போது ரூ. 488.36 கோடி சம்பாதித்தது, ஜெயிலருக்கும் “எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம்” என்ற பெயருக்கு போட்டியாக இருக்கும் ஒரே படம் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 2.0 (2018) படம் தான். இந்த படத்திலும் ரஜினிகாந்த் தான் நாயகன். 2.0 உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் திரையரங்குகளில் ரூ.723.30 கோடி வசூலைக் குவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil