ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சுதந்திரத்தினத்தை முன்னிட்டு நாளை வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் ரூ60 கோடிக்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், விநாயகன், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
சுதந்திர தின விடுமுறையை குறி வைத்து வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி (நாளை) ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை ஜெயிலர் படம் 6 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஆக்ஷன் என்டர்டெய்னர் மற்றும் ஒரு வருடத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் படம் வெளியாக உள்ளதால் இந்த படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
மேலும் இந்த எதிர்பார்ப்பின் காரணமாக ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ 60 கோடி வசூல் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மீடியா அறிக்கைகளின்படி, படம் முதல் நாள் முன்பதிவு விற்பனையில் 8 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, மேலும் திரையரங்குகளில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் தமிழகத்தில் முதல் ஷோவுக்கு முன்பே 10 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜெயிலர் படம் சோலோவாக வெளியாவதால் பாக்ஸ் ஆபிஸில் கூடுதல் பலம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“