எனர்ஜிடிக் ரஜினி... நடன புயலாக தமன்னா... காவாலா பாடல் மேக்கிங் வீடியோ

அருண்ராஜா காமராஜ் எழுத்தில் தமன்னாவின் நடனத்தில் ஷில்பா ராவ் குரலில் வெளியான இந்த பாடலின் வீடியோவில் ரஜினிகாந்த் கேமியோவில் வந்து சென்றார்.

அருண்ராஜா காமராஜ் எழுத்தில் தமன்னாவின் நடனத்தில் ஷில்பா ராவ் குரலில் வெளியான இந்த பாடலின் வீடியோவில் ரஜினிகாந்த் கேமியோவில் வந்து சென்றார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kavala Song Making

காவாலா பாடல் மேக்கிங் வீடியோ

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ஜெயிலர் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் காவாலா பாடல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனிடையே இந்த பாடல் எப்படி உருவானது என்பது குறித்த மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் ஜெயிலர். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல் பாடலான காவாலா சமீபத்தில் வெளியிடப்பட்டது. அருண்ராஜா காமராஜ் எழுத்தில் தமன்னாவின் நடனத்தில் ஷில்பா ராவ் குரலில் வெளியான இந்த பாடலின் வீடியோவில் ரஜினிகாந்த் கேமியோவில் வந்து சென்றார். வெளியானது முதலே காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், குழந்தைகள் மத்தியிலும் வைபை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த பாடருக்கு தங்களின் நடனத்தை பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவதும் அதை தமன்னா தனது சமூகவலைதளத்தில் ஷேர் செய்வது தொடர்ந்து வருகிறது. இதனிடையே பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பி வரும் காவாலா பாடல் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Advertisment
Advertisements

பாடலை போலவே இந்த மேக்கிங் வீடியோவும் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: