ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், சென்னையில் இந்த படத்தின் டிக்கெட் ரூ60-க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்னர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாணமாக தயாரித்துள்ள நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயிலர் படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) வெளியாக உள்ளது.
இதனிடையே படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு மற்றும் ரசிகர்கள் என பலரும் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், பான் இந்தியா படமாக வெளியாகும் ஜெயிலர் வசூலில் பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், பல இடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே சென்னையில் பல திரையரங்குகளில் ஜெயிலர் படத்திற்காக டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், ஒரு சில தியேட்டர்களில் குறைந்த விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வில்லிவாக்கம், மதுரவாயில், தி.நகர் மற்றும் நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.ஜி.எஸ் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் ரூ60-க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தர்சனா சினிமா வளாகத்தில் டிக்கெட்டின் விலை ரூ80 முதல் பிரீமியம் சீட்கள் ரூ160 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் மெஜஸ்டிக் தியேட்டர் நரக்கல்லில் டிக்கெட் விலை ரூ100 மட்டுமே.
பெங்களூரில் ஜெயிலர் டிக்கெட் விலை
பெங்களூரின் வெங்கடேஷ்வரா சினிமாஸ் 4K, A/C ஸ்கிரீன் 1: கொல்லரஹட்டியில், காலை 6 மணி காட்சிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 100, டிக்கெட்டுகள் ரூ. 150 ஆக உயரும்.
ஹைதராபாத்தில் ஜெயிலர் டிக்கெட் விலை
ஹைதராபாத்தில் டிக்கெட் விலை, குறைந்தபட்சம் ரூ. 200 முதல் தொடங்குகிறது. மூவி மேக்ஸ் (MovieMax) ஏஎம்ஆசு (AMR), ECII செகந்தராபாத் (Secunderabad) இல், குறைந்தபட்ச டிக்கெட் விலைகள் ரூ.200, அதைத் தொடர்ந்து ரூ. 250 மற்றும் ரூ. 350. இருப்பினும், மிராஜ் சினிமாஸ்: சினிடவுன் மியாபூரில், டிக்கெட் விலை ரூ. 175 இல் துவங்குகிறது. இது 235 வரை தொடர்கிறது. ஹைதராபாத் ராகவேந்திராவில் உள்ள மிராஜ் சினிமாஸ்க்கும் இது பொருந்தும்.
இதற்கிடையில், டெல்லி என்சிஆர் டிக்கெட்டுகள் ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், மும்பையில் ரூ.160 முதல் ரூ.180 வரையிலும் டிக்கெட்டுகள் தொடங்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“