சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது கமல்ஹாசன் தான் என்று தற்போது வெளியாகியுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது 169-வது படமாக தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாணடமாக தயாரித்துள்ளது.
படத்தில் ரஜினிகாந்துடன், தமன்னா ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், அனிருத்த இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியாகி ஜெயிலர் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழா குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில், சுமார் 45 நிமிடங்கள் பேசிய ரஜினிகாந்த், கூறியி கழுகும் காகமும் கதை ஹைலைட்டாக அமைந்தது. மேலும் படத்தின் வில்லன் கேரக்டர் மிகவும் வலிமையானது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் வில்லனாக ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்க இயக்குனர் விரும்பினார்.
எனது நெருங்கிய நண்பரான அந்த நடிகரை சம்மதிக்க வைக்குமாறு எ்னை இயக்குனர் வற்புறுத்தினார். அதனால் தனது நண்பருடன் தொடர்பு கொண்டதாகவும், அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறிய ரஜினிகாந்த் நீண்ட யோசனைக்குப் பிறகு அவரது மனம் அவரை ஒப்புக் கொள்ளவில்லை, இதை நெல்சனிடம் சொன்னபோது அவரும் ஒப்புக்கொண்டார்.
மேலும் அவர்கள் படத்திற்கு எது நல்லது என்று நினைக்கிறீர்களோ அதை முடிவு செய்யும்படி தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் மலையாள நடிகர் விநாயகனை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சின் மூலம் நடிகர் நண்பர் ரஜினி குறிப்பிடுவது வேறு யாருமல்ல, அவருக்கு ஐந்தாண்டு கால போட்டியாளர் கமல்ஹாசன் தான் என முடிவு செய்த நெட்டிசன்கள் ஏறக்குறைய 30 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்களையும் திரையில் ஒன்றாகப் பார்க்கும் வாய்ப்பு நழுவிப் போய்விட்டதாக புலம்புகின்றனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் ரஜினியும் கமலும் மீண்டும் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“