Advertisment

விஜய்யை பார்க்க வந்த ஜப்பான் ரசிகைகள்: இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்த விஜய் ரசிகர்கள்; வைரல் வீடியோ

விஜய்யை பார்க்க சென்னை வந்த ஜப்பான் ரசிகைகளுக்கு விஜய் ரசிகர்கள் பலத்த வரவேற்பு அளித்த நிலையில், லியோ பட பாடலை பாடி அசத்தியுள்ளார் ஜப்பான் ரசிகை

author-image
WebDesk
New Update
Vijay Japan

தளபதி விஜயயை பார்க்க ஜப்பானில் இருந்து வந்த 3 ரசிகைகள், அவரை பார்க்க முடியாதததால், மனமுடைந்த நிலையில், அவரை அழைத்து சென்று விஜய் ரசிகர்கள் செய்த செயல் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் விஜய். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்த விஜய், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்து தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்ரபையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்து விஜய் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ள நிலையில், இந்த படத்துடன் தனது திரையுலக பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் அடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதன் காரணமாக விஜயின் கடைசி படம், ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலகிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விஜய் தனது அரசியல் மாநாடு தொடர்பான ஆலோசனைகளில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் அதிக ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகைகளை வைத்துள்ள விஜயை பார்க்க அவ்வப்போது ரசிகர் ரசிகைகள் அவரது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், ஜப்பானில் இருந்து 3 ரசிகைகள், விஜயை பார்க்க, அவரது நீலாங்கரை இல்லத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் ஷூட்டிங் காரணமாக விஜய் வெளியூர் சென்றுள்ளதால், அவரை பார்க்க முடியாத நிலையில், சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த ஜப்பான் ரசிகைகளை பார்த்த விஜய் ரசிகர்கள் அவர்களை தங்களது அலுவலகத்திற்கு அழைத்து சென்று, தலைவரை பார்க்க கடல் கடந்து வந்திருக்கிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜப்பான் ரசிகை ஒருவர், லியோ படத்தில் வரும், நான் ரெடி தான் வரவா என்ற பாடலை பாடி, நடனமாடி அசத்தியுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த்-க்கு அடுத்து விஜய்க்கும் ஜப்பானில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment