பிரபல நடிகைக்கு மாரடைப்பு
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான சுஷ்மிதா சென் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். இது வாழக்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. என்கு 2 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பின் குணமடைந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
ரஜினியுடன் பிரியங்கா சோப்ரா – சானியா மிர்சா
தற்போது ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வரும் ரஜினிகாந்த் குறித்து தனமும் பல தகவல்கள வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா ஆகியோர் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
சிம்புவின் அடுத்த பட இயக்குனர் யார்?
வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு பத்து தல படத்தில் பிஸியாக இருக்கும் நடிகர் சிம்பு அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தேசிங்கு பெரியசாமி இதற்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியிருந்தார்.
சின்னத்திரையில் ராமராஜன்
90-களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர் ராமராஜன். சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்ற படத்தின் மூலம் ரீ-என்டரி ஆகியுள்ள ராமராஜன் தற்போது சின்னத்திரையில் என்டரி ஆகியுள்ளார். இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் ராமராஜன் சின்னத்திரையில் வருவது இதுவே முதல்முறை. விஜய்டிவியின் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியில் ராமராஜன் சிறப்பு விருந்திராக பங்கேற்க உள்ளார்.
ஜவான் படத்தை நராகரித்த தெலுங்கு நடிகர்
விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க நடிகர் அல்லு அர்ஜூனிடம் கேட்டதாகவும், கதையை கேட்டுவிட்டு அவர் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/