வனமகன்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஐ.அகமது நடிகர் ஜெயம் ரவி கூட்டணியில் தயாராகியுள்ள படம் இறைவன். நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில்
, ராகுல்போஸ் வில்லனாக நடித்துள்ளார். சைக்காலஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக தாயராகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது,
ஜெயம் ரவியின் முந்தைய படங்கள் அவருக்கு பெரியதாக வெற்றியை கொடுக்காத நிலையில், இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள இறைவன் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ஜெயம் ரவிக்கு முக்கிய கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஜெயம் ரவி - நயன்தாரா நடிப்பில் ஏற்கனவே வெளியான தனி ஒருவன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ்ஆபீஸில் பெரிய வெற்றிப்படமாக மாறிய நிலையில், தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள இறைவன் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“