Advertisment

காதல் மயக்கத்தில் ஜெயம் ரவி - நித்யா மேனன் : ரசிகர்களை கவர்ந்ததா காதலிக்க நேரமில்லை க்ளிம்ஸ்?

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நித்யா மேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Nith Ra

ஜெயம்ரவி - நித்யா மேனன்

ஜெயம்ரவி நித்யா மேனன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

2013-ம் ஆண்டு சிவா பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினின் மனைவியான இவர், அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் காளி என்ற படத்தை இயக்கினார். வித்தியாசமான வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

2013-ல் முதல் படம் 5 வருட இடைவெளிக்கு பிறகு 2-வது படம் இயக்கிய கிருத்திகா உதயநிதி, அடுத்து 4 வருட இடைவெளிக்கு பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்த இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜெயம் ரவி நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடித்து வருகிறார்.

யோகி பாபு, வினய், ஜான் கோக்கன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில, படத்தின் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 30 வினாடிகள் கொண்ட இந்த க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த க்ளிம்ஸ் வீடியோ மூலம் படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kiruthiga Udhayanidhi Nithya Menen Jayam Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment